இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே கடுமையான போர் வெடித்துள்ளது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. தாலிபன்கள் பயங்கரவாதிகளை அனுப்புவதாகவும் நாட்டில் அமைதியை சீர்குலைப்பதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த ஓராண்டு காலமாகவே இரு நாடுகளும் அவ்வப்போது மோதி கொள்ளும்.

வழக்கமாக மோதல் நடக்கும் பின்னர் அமைதி ஆகிவிடும் ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மிகத் தீவிரமான போர் தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்துள்ளது .இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது இரண்டு நாடுகளும் தாக்குதல் நடத்திக் கொள்வதால் பெரிய அளவிலான பதற்றம் உண்டாகி இருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஆப்கானிஸ்தானின் காபுல், கந்தஹார் ஆகிய நகரங்களை குறிவைத்து தங்கள் நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துவதாக தெரிவித்திருக்கிறார். இது தவிர கைபர் பக்துன்குன்வா பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளிலும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் உடனான பிரச்சனையை சரிசெய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் அது எதுவும் கை கொடுக்கவில்லை இதனால் தான் தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் எனக் கூறியிருக்கிறார். தற்போது இது ஒரு நேரடி போர் என அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தங்களுடைய நாட்டை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் பாகிஸ்தானின் தாக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டோம் பதில் தாக்குதல் நடத்துவோம் என கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இந்த மோதல் போக்கு நிலவி வருவது சர்வதேச அளவில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரு நாடுகளும் நடத்தி கொள்ளும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் தான் காயமடைந்தும் கொல்லப்பட்டும் வருகின்றனர்.
இதற்கிடையே ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போரை நிறுத்தி சமாதானம் அடைய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளன. குறிப்பாக ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யவும் தயராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications