சீனா பாகிஸ்தான் சந்திப்பு.. முதலீடுகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல நாடுகளும் மெதுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் மோசமான சரிவினைக் கண்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமையை மேம்படுத்த சீனா உறுதுணையாக இருக்கும் என சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

 

ஜி ஜின்பிங்கின் இந்த அறிவிப்பானது பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ள நிலையில் வந்துள்ளது.

ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..? ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..?

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

சீனா பாகிஸ்தான் இடையேயான நட்புறவானது நீண்டகாலமாகவே இருந்து வரும் நிலையில், வர்த்தக ரீதியாகவும் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஷெபாஸ் ஷெரீப் அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதிக்கலாம்

விவாதிக்கலாம்

குறிப்பாக பொருளாதார மந்தம், பணவீக்கம், விலைவாசி ஏற்றம், கடன் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், முதலீடு செய்வது குறித்தும், பொருளாதாரத்தினை மேம்படுத்துவது குறித்தான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மேம்பட திட்டம்
 

பொருளாதார மேம்பட திட்டம்

இத்தகைய சூழலுக்கு மத்தியில் ஜி ஜின்பிங்கின் கருத்தானது வந்துள்ளது. நிதித் சூழலை மேம்படுத்துவது குறித்தும், 65 பில்லியன் டாலர் பொருளாதார (CPEC) வழித்தட திட்டம் குறித்தும் இந்த இரு தரப்பு சந்திப்பில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மோசமான சரிவினைக் எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக மாறலாம்.

பிச்சை எடுக்கிறோம்

பிச்சை எடுக்கிறோம்

முன்பாக பாகிஸ்தான் நிதி உதவிக்காக பல்வேறு நாடுகளிடமும் உதவியினை எதிர்பார்த்தது. நாங்கள் உதவிக்காக கெஞ்சுகிறோம் என உள்நாட்டு மக்கள் நினைக்கின்றனர். பாகிஸ்தான் 75 ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் கிண்ணத்துடன் அலைந்து கொண்டுள்ளது என்றார் ஷெரீப் வேதனை தெரிவித்திருந்தார்.

சீனா தான் முக்கிய பங்கு

சீனா தான் முக்கிய பங்கு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரின் ஆட்சிகாலத்தின் போது, வளர்ச்சி மெதுவாக இருந்ததாக கூறிய ஷெரீப்பின் கூற்றை மறுத்துள்ளார்.

பாகிஸ்தானின் 27 பில்லியன் டாலர் கடனில், 23 பில்லியன் சீனாவால் ஆனது என்ற குற்ற சாட்டும் உள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் வலுவான நட்பு நாடுகளாக இருப்பதால், பாதுகாப்பு, முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படலம என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா பெல்ட் அன்ட் ரோடு திட்டம்

சீனா பெல்ட் அன்ட் ரோடு திட்டம்

சீனா பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் சிறிய நாடுகள், மிகப்பெரிய கடன் சுமைக்கு ஆளாகலாம் என்ற விமர்சனம் பரவலாக இருந்து வருகின்றது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இலங்கை , பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பெரும் மோசமான சரிவினைக் கண்டுள்ளதை பார்க்க முடிகிறது.

பெரு வெள்ளத்தால் பாதிப்பு

பெரு வெள்ளத்தால் பாதிப்பு

இத்தகைய கடன் பிரச்சனைக்கு மத்தியில் பாகிஸ்தானில் பெரும் வெள்ளம் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தினால் குறைந்த பட்சம் 30 பில்லியன் டாலர் இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சரிகட்டும் விதமாக பாகிஸ்தான் பல்வேறு நாடுகளுடன் உதவிக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

சீனாவிடம் உதவி கேட்கலாம்

சீனாவிடம் உதவி கேட்கலாம்

இதற்கிடையில் தான் ஷெரீப்பின் சீனா பயணம் உள்ளது. இந்த பயணத்தில் சீனாவிடம் பாகிஸ்தான் உதவி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மத்திய வங்கியிடம் 7.4 பில்லியன் டாலர் கையிருப்பானது உள்ளது. ஒன்ரறை மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistan may seek financial assistance from China

Pakistani President Shehbaz Sharif is expected to ask China for help during his visit to China.
Story first published: Wednesday, November 2, 2022, 17:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X