பாகிஸ்தானில் எரிபொருள் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 55 பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 18 ரூபாய்) உயர்ந்து 321.17 ரூபாயாகவும், டீசல் 335.86 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் நாட்டின் ARY நியூஸ் தளம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் பொருளாதாரத்துக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வு
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் அரசு இந்த விலை உயர்வை நுகர்வோருக்கு அப்படியே அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், "உலக எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோருக்கு இதை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் எண்ணெய் விநியோகத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
IMF கொடுத்த
பாகிஸ்தான் அரசு சுமார் 100 பில்லியன் டாலர் கடனில் சிக்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானிடம் தற்போதைய நிதி நிலையில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று கடுமையான உத்தரவை விடுத்தது.
இந்த உத்தரவை, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் IMF குழுவுக்கும் இடையே நடந்த ஆன்லைன் பேச்சுவார்த்தையில் கொடுக்கப்பட்டது. IMF-யின் இந்த உத்தரவால் பாகிஸ்தான் அரசு விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஆப்கானிஸ்தான் உடனான தாக்குதல் பெரும் பிரச்சனையை உருவாக்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு அந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் பதற்றம்
விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பே லாகூர், கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மக்கள் வாகனத்துடன் நின்றனர். மக்கள் புதிய விலை அமலுக்கு வருவதற்கு முன் தங்கள் வாகனங்களை நிரப்ப முயன்றனர். இது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications