ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் திட்டம்.. யாருக்கு பலன்!

ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானும் அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு தங்கம் விலையானது, 76.89 டாலராக காணப்படுகிறது.

இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 82.99 டாலராக காணப்படுகின்றது.

விலை குறைவாக கச்சா எண்ணெய்

விலை குறைவாக கச்சா எண்ணெய்

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை காரணமாக ஜி7 நாடுகள் விதித்த உச்ச வரம்பை காட்டிலும், பேரலுக்கு 50 டாலர்கள் என்ற லெவலில் விலை கேட்பதாக தெரிகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு பணமில்லா பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் முயற்சி

மேற்கத்திய நாடுகள் முயற்சி

உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீண்டும் வரவும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதேவேளையில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கை

மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கை

அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் வருவாயை மட்டுப்படுத்த, ரஷ்ய கச்சா எண்ணெய்யின் விலையை ஒரு பேரலுக்கு 60 டாலராக குறைக்க மேற்கத்திய ஜி-7 நாடுகளின் கூட்டணி விலை உச்ச வரம்பை நிர்ணயம் செய்தன.
ரஷ்யாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூடிய கச்சா எண்ணெய் விலையை குறைத்ததால், வருவாய் கணிசமாக குறையும் என்பது மேற்கத்திய நாடுகளின் நம்பிக்கை.

இஸ்லாமிய நாடுகள் அதிருப்தி

இஸ்லாமிய நாடுகள் அதிருப்தி

இந்த நிலையில் இந்த தடைகளையும் மீறி சீனா இந்தியா ஏற்கனவே எண்ணெய் வாங்கி வருகின்றன. தற்போது அந்த பட்டியலில் பாகிஸ்தானும் இணையலாம் என தெரிகிறது.

பாகிஸ்தானின் இந்த முடிவு சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நட்பு நாடுகள் மத்தியிலும் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ரூபாய் சரிவு

பாகிஸ்தான் ரூபாய் சரிவு

தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இது பாகிஸ்தானுக்கு பெரும் உதவிகரமாக அமையலாம். பாகிஸ்தான் தற்போதுள்ள சூழ்நிலை ஆதரவாக அமையலாம். குறிப்பாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு ஏற்கனவே மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

அலசி ஆராயலாம்

அலசி ஆராயலாம்

இந்த நிலையில் இது அவசியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. கட்டணம் செலுத்தும் முறை, கப்பல் செலவு, இன்சூரன்ஸ் போன்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து இதற்கு, ரஷ்யா சரியானதொரு பதிலை அளிக்கலாம் என தெரிகிறது. ஆக அடுத்த மாதம் முதல் சரக்கு இறக்குமதி பாகிஸ்தானுக்கு வர உள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.

செலவு அதிகரிக்கலாம்

செலவு அதிகரிக்கலாம்

எனினும் ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வர 30 நாட்கள் ஆகும் என்பதால், போக்குவரத்தில் செலவு என்பது பேரலுக்கு 10 - 15 டாலர்கள் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

எது எப்படியோ இது இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், சோதனை முறையாக பாகிஸ்தான் ஒரு முறை இறக்குமதி செய்யலாம் என தி நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

டாலருக்கு பற்றாக்குறை

டாலருக்கு பற்றாக்குறை

மேலும் பாகிஸ்தானில் தற்போது டாலருக்கான பற்றாக்குறை என்பதும் நிலவி வரும் நிலையில், இது மற்ற நட்பு நாடுகளின் கரன்சிகள் மூலம் பணம் செலுத்தலாம்.

கடந்த ஆண்டே இது குறித்து பாகிஸ்தான் கேட்டதையடுத்து ரஷ்யா 30% தள்ளுபடியில் கொடுக்க மறுத்தது. பாகிஸ்தானின் இறக்குமதியிலும் எரிபொருள் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. அன்னிய செலவாணி குறைவாக இருக்கும் நிலையில், ரஷ்யாவுடன் அல்லது நீண்டகால ஒப்பந்தங்கள் நாட்டின் நிதிச்சுமையை குறைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+