பாகிஸ்தான்-ஆ முடியாது முடியாது.. ரஷ்யா அறிவிப்பால் பெரும் சோகம்..!!

உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் ரஷ்யா முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மற்றும் இதர முக்கியப் பொருட்களின் விநியோகத்தின் அடிப்படையில் தான் பல நாடுகளின் பொருளாதாரம், விலைவாசி ஆகியவை உள்ளது.

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ரஷ்யாவை அதிகளவில் நம்பியிருந்த நிலையில் தற்போது ரஷ்யா எடுத்த முடிவு பெரும் சோமாக மாறியுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சுமார் 35-39 சதவீத வரையிலான தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வாங்கி வருவது அனைவருக்கும் தெரியும், இதே போன்ற சலுகையில் பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி செய்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ஆனால் அதற்கு ரஷ்யா கொடுத்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து கடன்களை மட்டுமே நம்பி நாட்டை வழிநடத்த முடியாத அளவிற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

பென்ச்மார்க் வட்டி

பென்ச்மார்க் வட்டி

இந்த நிலையைச் சமாளிக்க நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டு மத்திய வங்கி சமீபத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி

கச்சா எண்ணெய் இறக்குமதி

பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சேமிக்கும் ஒவ்வொரு டாலரும் பெரிய அளவிலான பலனை அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் அரசு ரஷ்யாவிடம் இந்தியாவுக்கு அளிப்பது போலவே தள்ளுபடியில் கச்சா எண்ணெய் அளிக்கக் கோரிக்கை வைத்தது.

30-40 சதவீத தள்ளுபடி

30-40 சதவீத தள்ளுபடி

ஆனால் இந்தியாவில் நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்குக் கச்சா எண்ணெய்-யில் 30-40 சதவீத தள்ளுபடி எல்லாம் கொடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள்

பாகிஸ்தான் அதிகாரிகள்

புதன்கிழமை ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் பாகிஸ்தான் நாட்டின் எண்ணெய் வள துறை அதிகாரிகள், செயலாளர்கள், மாஸ்கோவில் இருக்கும் பாகிஸ்தான் எம்பசி அதிகாரிகள் ஆகியோர் கச்சா எண்ணெய் தள்ளுபடி கோரிக்கை உடன் ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்தனர்.

ரஷ்யா மறுப்பு

ரஷ்யா மறுப்பு

இந்தக் கூட்டத்தில் ரஷ்யா அதிகாரிகள் தற்போது உற்பத்தி செய்யப்படும் அனைத்து எண்ணெய்களுக்கும் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது இதனால் இப்போதைய சூழ்நிலையில் தள்ளுபடி அளிக்க முடியாது எனப் பாகிஸ்தான் தரப்பு கோரிக்கையை மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்

பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்

சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் அந்நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியாவைப் போல் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்.

அமெரிக்கா தடுக்க முடியாது

அமெரிக்கா தடுக்க முடியாது

இதைத் தொடர்ந்து இஷாக் தர் துபாயில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ தடுக்க முடியாது. ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்ட இதே நேரத்தில் தான் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை தள்ளுபடியில் இறக்குமதி செய்து வருகிறது.

 ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான்

ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் நவம்பர் 25 ஆம் தேதி நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் அதன் பென்சமார்க் வட்டி விகிதத்தை சுமார் 100 அடிப்படை புள்ளிகள் அதாவது 1 சதவீதம் அதிகரித்து 16 சதவீதமாக அறிவித்துள்ளது.  இதற்கு முன்பு பாகிஸ்தான் நாட்டில் 1998ல் பென்ச்மார்க் வட்டி 16.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+