பாகிஸ்தான் அரசியல், பொருளாதாரம், நிதி நிலைமை, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமாக மாறியிருக்கும் வேளையில் ஐஎம்எப் அமைப்பின் கடனுக்காகக் காத்துக்கிடக்கும் வேளையில் பெரிய இடி விழுந்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரத்தைப் பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டு இறுதியில் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாகப் பாகிஸ்தான் ரூபாய் தான் முதல் இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல்.. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் சரிவு 2024 ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிராகப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சுமார் 20% குறைந்துள்ளது. இந்த வேளையில் அந்நாட்டின் நிதி நிலையும், பொருளாதாரம் மேம்படாத காரணத்தால் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டில் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிராகப் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 350 ரூபாய் என்ற மோசமான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக BMI ஆராய்ச்சி கணித்துள்ளது மற்றும் கராச்சியைத் தளமாகக் கொண்ட டாப்லைன் செக்யூரிட்டீஸ் ஒரு டாலருக்கு 324 ஆகக் குறையும் என்றும் கணித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 285.75 ஆக உள்ளது.பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியமான காரணம் அந்நாட்டில் நிலவும் அதிகப்படியான பணவீக்கம் மற்றும் மோசமான வர்த்தகப் பற்றாக்குறை தான் என லண்டன் BMI அமைப்பின் சர்வதேச பொருளாதார வல்லுனர் ஜான் ஆஷ்போர்ன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாகிஸ்தான் நாட்டின் அதிகப்படியான கடன் தொகை மற்றும் முதலீட்டு வித்தியாசம் ஆகியவையும் ரூபாய் மதிப்பைப் பாதிக்கிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் இந்த ஆண்டுத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கடைசி நேரத்தில் பல நாடுகளின் நிதியுதவி காரணமாகக் காப்பாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications