பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹபீப் வங்கி அமெரிக்காவில் 1978ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 40 வருட வர்த்தக வரலாற்றைக் கொண்டுள்ள இந்நாட்டின் மிகப்பெரிய வங்கியை அமெரிக்கச் சந்தையை விட்டு முழுமையாக வெளியேற அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம் தெரியுமா..?
ஹபீப் வங்கி
ஹபீப் வங்கி தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததுள்ளது, பணச் சலவையில் ஈட்டுப்பட்டுள்ளது என அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் பல முறை இவ்வங்கியை குற்றம்சாட்யும் அதனை மறுத்து நிரூபிக்கத் தவறியுள்ளது.
இதனையடுத்தே இந்த அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளது.
கவனிக்கத் தவறியது..
பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹபீப் வங்கி, குற்றச்சாட்டுகள், ஆபத்தான பணப் பரிமாற்றங்களைக் கவனிக்கத் தவறியுள்ளது. இதனால் இவ்வங்கி தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தும், பணச் சலவையில் ஈடுப்பபட்டுள்ளது மட்டும் அல்லாமல் பல்வேறு மோசடி வேலைகளில் ஈட்டுப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வங்கி அமைப்பு கூறியுள்ளது.
அபராதம்
இதுமட்டும் அல்லாமல் ஹபீப் வங்கி மீது 225 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது, இது முந்தைய அறிவிப்பில் 629.6 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு முதல்..
1978ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வரும் ஹபீப் வங்கி 2006 முதல் முறையற்ற பணப் பரிமாற்றம் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்படும் இருந்தது.
பணப் பரிமாற்றம்
அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த சவுதி பிரைவேட் வங்கி மற்றும் அல் ரஜாஹி வங்கி ஆகியவற்றுடன் பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை ஹபீப் வங்கி பரிமாற்றம் செய்துள்ளது.
இந்தப் பணம் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தவில்லை, பணச் சலவையும் செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்கத் தவறிய காரணத்தால் அமெரிக்காவை விட்டு முழுமையாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications