உலகின் பல நாடுகளில், பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு எப்படி மும்பை பங்குச் சந்தை இருக்கிறதோ, அதே போல பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் பங்குச் சந்தை (Pakistan Stock exchange) செயல்பட்டு வருகிறது.

இன்று காலை, கராச்சியில் இருக்கும், பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி மற்றும் கை எரி குண்டுகளை (Grenades) வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்களாம்.
இதுவரை, பாகிஸ்தான் பங்குச் சந்தை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில், நான்கு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்களாம். இந்த தீவிரவாதிகள் தாக்குதல் சூழலை, பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு சமாளித்து வருவதாக பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் சொல்லி இருக்கிறது.
இந்த தாக்குதலில், ஐந்து பேர் உயிர் இழந்து இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வேலையில் அரசு இறங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சொல்கின்றன.
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில், பாகிஸ்தான் நாட்டின் பல வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையின் முக்கிய இண்டெக்ஸான கராச்சி ஸ்ஆக் எக்ஸ்சேஞ்ச் 30 (KSE 30) இண்டெக்ஸ் 14,665 புள்ளிகளில் வர்த்தகமாவதாகச் சொல்கிறது ப்ளூபெர்க்.
தீவ்ரவாதிகள் தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறதா அல்லது வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்த இருக்கிறார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை.
ஏற்கனவே ஆசிய பங்குச் சந்தைகள் எல்லாம் பயங்கர இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி மட்டும் 2.3 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்போது பாகிஸ்தான் பங்குச் சந்தை மீது வேறு தாக்குதல் நடத்தி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட் மாறலாம்.
ஏற்கனவே இந்தியாவில், மும்பை பங்குச் சந்தை சுமாராக 350 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications