பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நாட்டின் சந்தை சூழ்நிலைகளை ஏற்புடையதாக உருவாக்குவதற்கு அந்நாட்டின் அரசு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மீதான பிடியை தளர்த்தினர்.

இதன் எதிரொலியாக பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு 4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது, இதன் மூலம் அந்நாட்டின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது.

இதேவேளையில் இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் பொருளாதாரம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நாணய கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்.. அமெரிக்கா அறிவிப்பு..! நாணய கண்காணிப்பு பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்.. அமெரிக்கா அறிவிப்பு..!

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய்

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை ஒரு நாளில் மட்டுமே 7 சதவீதம் சரிந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 4.2 சதவீதம் சரிந்தது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 259.7148 ஆக சரிந்துள்ளது.

6.5 பில்லியன் டாலர்

6.5 பில்லியன் டாலர்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 6.5 பில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக உறுதி அளித்துள்ள நிலையில், பல மாதங்களாக இந்த நிதி உதவியின் அடுத்த தவனணகளை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

ஐபிஎப்  நிதியுதவி

ஐபிஎப் நிதியுதவி

ஐபிஎப் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றால் பல்வேறு காரணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் அதில் அந்நாட்டின் ரூபாய் மதிப்பும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிய முக்கியமான காரணம் அந்நாட்டின் அரசு எடுத்த முடிவு தான்.

மின்வெட்டு, டாலர் தட்டுப்பாடு

மின்வெட்டு, டாலர் தட்டுப்பாடு

மின்வெட்டு, டாலர் தட்டுப்பாடு மற்றும் அரசியல் பதட்டங்கள் என பல பிரச்சனைகளை தலையில் சுமந்துக்கொண்டு உள்ள பாகிஸ்தான் பொருளாதாரம் அடுத்த சில மாதங்களில் திவாலாகி விடும் என பல கணிப்புகள் வரும் வேளையில், இதை சரி செய்வதற்கான முயற்சிகளை அந்நாட்டின் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

 ஷெஹ்பாஸ் ஷெரீப்

ஷெஹ்பாஸ் ஷெரீப்

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அந்நாட்டின் பொருளாதாரத்தை திவால் ஆக கூடாது என்பதற்காக கடுமையான திட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார். அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட IMF உடனான கடன் பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த போதுமான நிதி கிடைக்கும். மேலும் நாட்டின் அந்நிய செலாவணி இருப்புக்களை மீண்டும் கட்டமைக்க உதவும்.

டாலர்-ரூபாய்

டாலர்-ரூபாய்

இந்த நிலையில் தான் பாகிஸ்தானின் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் திறந்த சந்தையில் டாலர்-ரூபாய் விகிதத்தின் வரம்பை ரத்து செய்ததன் மூலம் இந்த வாரம் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவை பதிவு செய்தது.

கள்ள சந்தை

கள்ள சந்தை

உள்நாட்டு பண பரிவர்த்தனை நிறுவனங்களிடம் டாலர் இருப்பு குறைந்த காரணத்தால் நிறுவனங்கள் அனைத்தும் டாலருக்காக கள்ள சந்தையை நாட துவங்கியுள்ளது. கள்ள சந்தையில் டாலரை 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் இந்த டாலர்-ரூபாய் விகித வரம்பை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தான் மக்கள் மின்சாரம் இல்லாமலும், போதுமான எரிபொருள் இல்லாமலும், அதிகப்படியான விலைவாசி உடன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அன்னிய செலாவணி மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் டாலர் இருப்பு இல்லாமல் இறக்குமதி செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pakistani rupee fall upto 259; Historic low aganist USD

Pakistani rupee fall upto 259; Historic low aganist USD
Story first published: Saturday, January 28, 2023, 17:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X