சர்வதேச கச்சா எண்ணெய் விலை முதல் முறையாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு எரிபொருள் இருப்பை பாதுகாக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அந்நாட்டு மக்களிடம் பேசிய போது, "போர் மற்றும் பிராந்திய நிலைமை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதித்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்தாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்" என்று கூறினார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சனிக்கிழமை பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 55 ரூபாய் உயர்த்தப்பட்டது, இது IMF கொடுத்த நெருக்கடியால் அறிவிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கான விலை உயர்வு இது.
மேலும் பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் இனி வரும் நாட்களில் வாராந்திர விலை திருத்தம் செய்யலாம் என்று எச்சரித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு கச்சா எண்ணெய் பயன்பாட்டை சேமிக்க முக்கிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்
அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு, வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை என்ற புதிய முறையை அமல்படுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசு செலவுகள் 20 சதவீதம் குறைக்கப்படுகின்றன. அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள் அளவு பாதியாக குறைக்கப்படுகிறது.
பள்ளிகள் மூடல்
அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாகிஸ்தான் முழுவதும் பள்ளிகள் மூடப்படுகின்றன; பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றன. அமைச்சரவை உறுப்பினர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு சம்பளம் அளிக்கப்படாது. அத்தியாவசியமற்ற வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம்
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷரீஃப்-ம் முக்கிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.
அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் பெட்ரோல்-டீசல் அலவன்ஸ் உடனடியாக 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் வரும் புரோட்டோகால் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அத்தியாவசிய பாதுகாப்புக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அரசு அலுவலகங்களில் Work from Home கொள்கை அமல்படுத்தப்படுகிறது; அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 10 முதல் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்.
எரிபொருள் விலை உயர்வு பாகிஸ்தானில் பணவீக்கத்தை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாக உயர்த்தும் என்று AKD செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சி இயக்குநர் முகமது அவைஸ் அஷ்ரஃப் கூறினார். சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தவுடன் உடனடியாக உள்நாட்டு விலையை திருத்துவது அவசியம் என்றும், இல்லையெனில் பெட்ரோல் பம்ப்களில் பதுக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரான் போர் உலக எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் அரசு எரிபொருள் இருப்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications