ஜப்பானை சேர்ந்த பேனசோனிக் (Panasonic) நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மின்னணு சாதன நிறுவனமான பேனசோனிக் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 10,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தங்களுடைய நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. பேனசோனிக் நிறுவனம், நிறுவனத்தின் செயல் திறனை முழுமையாக மதிப்பாய்வு செய்து , விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை, அந்த துறைகளின் செயல் திறன் எவ்வாறு இருக்கிறது, இந்த துறைகளில் எல்லாம் எத்தனை பேர் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் ஆகியவற்றையெல்லாம் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பணி நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் ஜப்பானில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தாயிரம் பேரும் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களில் ஐந்தாயிரம் பேரும் வேலை இழக்க உள்ளனர். இந்த நிறுவனத்தில் ஜப்பான் மட்டும் இல்லாமல் உலக நாடுகள் முழுவதும் சேர்த்து மொத்தம் 2 , 30, 000 பேர் வேலை செய்கின்றனர். தற்போது 10000 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுவதன் மூலம் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதம் குறைய இருக்கிறது.
ஜப்பானின் ஒசாகா நகரில் தொடங்கப்பட்ட பேனசோனிக் நிறுவனம் உலகம் முழுவதும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி பிராண்டாக இருந்து வருகிறது. தொலைக்காட்சிகள் தொடங்கி டிஜிட்டல் கேமராக்கள், சமையல் அறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், மொபைல் போன்கள் என இந்த நிறுவனம் கால் பதித்த துறையில் எல்லாம் வெற்றியை தான் கண்டிருக்கிறது. தற்போது பேனசோனிக் நிறுவனம் டெஸ்லா உள்ளிட்ட முன்னணி மின்சார வாகன நிறுவனங்களுக்கு தேவையான பேட்டரிகளை தயாரித்து வழங்கும் தொழிலையும் மேற்கொண்டு இருக்கிறது.
அடுத்த கட்டமாக தங்கள் நிறுவனம் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதற்காக அதிக அளவு முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 1918 ஆம் ஆண்டு ஜப்பானில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் பேனசோனிக் . 2024ஆம் ஆண்டில் 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனமாக இது உள்ளது. ஏசி, வீட்டு உபயோக பொருட்கள், கோல்டு செயின் பொருட்கள், வாஷிங் மெசின் ஆகிய பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக இது செயல்படுகிறது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications