அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கையில் அவர் பெருமளவிலான அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா , சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பகைத்துக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர் ஒரு நபர்.
டிரம்பின் ரைட் ஹேண்ட் : அனைத்து அரசாங்கத்திலுமே பிரதமரோ அல்லது அதிபரோ தலைமை பதவி பதவியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்தும் வர்த்தகம் சார்ந்தும் வெளியுறவு சார்ந்தும் ஆலோசனை வழங்குவதற்கு என தனி தனியாக ஆலோசகர்கள் இருப்பார்கள் . அந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் வர்த்தக பிரிவு ஆலோசகராக இருப்பவர் தான் பீட்டர் நவாரோ. இவர் தான் டிரம்பின் ரைட் ஹேண்ட் என கூறுகிறார்கள்.

பீட்டர் நவாரோ :டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எல்லாம் இவர் தான் குரு. இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணகர்த்தாவே இவர் தான் . யார் இந்த பீட்டர் நவாரோ என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் தான் பீட்டர் டெண்ட் நவாரோ. பல சர்ச்சைகளில் சிக்கிய ஒரு பொருளாதார நிபுணர் என்று கூட கூறலாம்.
கல்வி: பீட்டர் நவாரோ ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். அதேபோல பொருளாதாரப் பிரிவில் பிஎச்டி முடித்திருக்கிறார். இதனை அடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ,சாண்டியாகோ பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் எல்லாம் இவர் பேராசிரியராக பணி புரிந்தார் . பொருளாதாரன், பொது நிர்வாகம் , வர்த்தகம என பல்வேறு பிரிவுகளில் இவர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு.
கொள்கை என்ன: இவர் அமெரிக்க வர்த்தக நடைமுறை , வெளிநாடுகள் எப்படி அமெரிக்க வர்த்தக கொள்கைகளை பயன்படுத்தி டாலரை கொள்ளை அடிக்கின்றன என்பன குறித்தெல்லாம் பல்வேறு புத்தகங்களையும் நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். குறிப்பாக நவாரோவை பொறுத்தவரை சீனா மீது கடுமையான ஒரு எதிர்ப்பு மனநிலையை கொண்டவர். சீனா அமெரிக்காவில் மலிவான பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறது. இதனால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறைந்து இருக்கிறது என தொடர்ச்சியாக கூறி வருபவர்.
சீனாவுக்கு எதிரானவர்: சீனாவின் வர்த்தக நடைமுறைகளை எதிர்த்து பல புத்தகங்களையும் இவர் எழுதியிருக்கிறார். இதில் முக்கியமானது தான் Death by China புத்தகம். இது தான் டிரம்புக்கும் இவருக்கும் இடையே நட்பை ஏற்படுத்தியது. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர், இவர் எழுதிய Death by China புத்தகத்தை படித்திருக்கிறார். அந்த புத்தகத்தின் இடம் பெற்றிருந்த தகவல்களால் ஈர்க்கப்பட்ட அவர் உடனடியாக நவாரோவை அழைத்து பேசியிருக்கிறார் இதனை அடுத்து நவாரோவை தன்னுடைய மாமனாரான ட்ரம்பிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஆலோசகர் பதவி அளித்த டிரம்ப்: நவாரோவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய தேர்தல் பரப்புரையில் முக்கியமான நபராக இணைத்துக் கொண்டார் டிரம்ப். முதன்முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது தன்னுடைய நிர்வாகத்தில் வர்த்தக பிரிவு ஆலோசகராக இவருக்கு முக்கிய பொறுப்பினை வழங்கினார். அந்த சமயத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான வர்த்தக மோதல் ஏற்பட்டது அதற்கு பின்னணியில் இருந்தவர் நவாரோ தான்.
டிரம்பின் குரு: அமெரிக்காவிற்கே முன்னுரிமை என்ற வர்த்தகக் கொள்கையை வகுத்து டிரம்பை அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்கச் செய்தவர் நவாரோ. அமெரிக்க அரசாங்கம் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் குறைந்த இறக்குமதி வரியை விதிக்கிறது ஆனால் மற்ற நாடுகளோ நியாயமான வர்த்தக நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவே அமெரிக்கா அதன் மீது போட்டி வரிகளை விதிக்க வேண்டும் என்ற ஒரு யோசனையை கொண்டு வந்ததே பீட்டர் நவாரோ தான் .
போட்டி வரிக்கு காரணமானவர்: இந்த நிலையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற போது மீண்டும் பீட்டர் நவாரோவை தன்னுடைய ஆலோசகராக சேர்த்துக்கொண்டார் . இந்த முறை அமெரிக்காவின் வர்த்தக மற்றும் உற்பத்தி பிரிவின் மூத்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது. டிரம்ப் பதவி ஏற்ற உடனே போட்டி வரி அறிவிப்பை வெளியிட்டார், அதனை வகுத்து கொடுத்ததே இவர் தான்.
இந்தியாவை விமர்சிப்பவர்: பீட்டர் நவாரோ தான் வரிவிதிப்பின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தலாம், அதன் மூலம் அவர்கள் ரஷ்யாவிடம் எண்ணேய் வாங்குவதை நிறுத்துவார்கள் என்ற யோசனையை தந்தவராம். இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை மேலும் ஊக்குவிக்கிறது என அண்மையில் கூட ஒரு கட்டுரையில் இவர் குற்றம்சாட்டி இருந்தார். அமெரிக்காவின் கூட்டாளியாக இந்தியா செயல்பட வேண்டும் என்றால் அதுபோல அது முதலில் நடந்து கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். இந்தியா திடீரென ரஷ்யாவையும் சீனாவையும் பாதுகாப்பு அரணாக தேடி செல்கிறது, இந்தியா சந்தர்ப்பவாத நாடு என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
More From GoodReturns

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications