ஸ்பெயின்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நுழையாத துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஸ்பெயினில் ஏஐ முறையில் உருவாக்கப்பட்ட ஒரு பெண் மாடல் தான் இப்போது சென்சேஷனாம்..
எய்டனா (aitana) பிங்க் நிற தலைமுடியுடன் காண்போரை கவர்ந்திழுக்கும் அழகுடன் காணப்படும் ஒரு மாடல். எய்டனாவை உயிருள்ள ஒரு பெண் மாடல் என்று தான் பலர் நினைத்திருந்தனர். ஆனால் அது ஒரு ஏஐ மாடல் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

ரூபன் கிரஸ் என்பவர் உருவாக்கிய ஸ்பெயினின் முதல் ஏஐ மாடல் எய்டனா. தற்போது இன்ப்ளூயன்சர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், எய்டனா எனும் மாடலை உருவாக்கி அதில் வருவாய் ஈட்டி வருகிறார் ரூபன் கிரஸ். தற்போது எய்டனா மாதத்திற்கு 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறது என்கிறார்.
இன்ஸ்டாகிராமில் எய்டனாவை சுமார் 3 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர்களில் பலருக்கு எய்ட்னா என்பது ஒரு ஏஐ மாடல் என்பது தெரியாது. ஒரு 25 வயது இளம் பெண் மாடலிங் துறையில் இருந்தால் அவரது சமூகவலைதள பக்கம் எப்படி இருக்குமோ, அப்படி தான் எய்ட்னாவின் இன்ஸ்டா பக்கம் இருக்கிறது.
இவர் ஒரு புகைப்படம் போட்டால் பல ஆயிரம் லைக்குகள் வருகின்றன. தற்போது எய்டனா பெரிய இன்ப்ளூயன்சராகவும் மாறியுள்ளார். ஒரு விளம்பரத்திற்கு 1,000 யூரோவை ஊதியமாக பெறுகிறார். ஸ்போர்ட்ஸ் நிறுவன விளம்பர தூதர், உள்ளாடை நிறுவன விளம்பர தூதர் என பல வழிகளிலும் வருமானம் கிடைக்கிறது.

எய்டனா அப்படியே உண்மையான பெண் போல இருப்பதே அவரது புகழ்ச்சிக்கு காரணம். ஒரு சமயம் லத்தீன் அமெரிக்க நடிகர் ஒருவர் எய்டனாவை டேட்டிங் அழைத்தாராம். ஆனால் இது ஒரு ஏஐ தெரிந்து பின்னர் பல்பு வாங்கி இருக்கிறார்.
மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வரும் கிரஸுக்கு , இன்ப்ளூயன்சர்களால் பல பிராஜெக்டுகள் தாமதமாகியுள்ளன. இதனால் சலிப்படைந்த அவர் நாம் ஏன் ஒரு ஏஐ மாடலை உருவாக்க கூடாது என்ற யோசனையில் களமிறங்கி உருவாக்கியது தான் எய்டனா.
உண்மைக்கும் , கற்பனைக்கும் இடையே உருவாக்க ஒரு அழகிய கதாபாத்திரமே எய்டனா என்கிறார் கிரஸ். எய்டனாவுக்கு என ஒரு குழு அமைத்து சமூகவலைதள பக்கங்களை மெயிண்டெயின் செய்கிறார்களாம். வரும் காலங்களில் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் ஏஐ மூலம் மாடல்களை உருவாக்கி கொள்ள முடியும், அதற்கு ஒரு உதாரணம் தான் எய்டனா என கூறுகிறார் கிரஸ்.
story written by: Devika


Click it and Unblock the Notifications