இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.. முதலீட்டாளர்களுக்கு மோடி அழைப்பு..!

தாய்லாந்து : இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்றும் தாய்லாந்து வணிகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இன்று நிகழும் சில சாதகமான சம்பவங்கள் குறித்த படத்தை உங்களுக்கு வழங்க நான் மிக ஆர்வமாக உள்ளேன் என்றும், நாம் மிக நம்பிக்கையுடன் சொல்கிறேன். இது இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த நேரம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா - ஆசிய மாநாடு தாய்லாந்தில் நடைபெற உள்ள நிலையில், அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மோடி அங்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள நிலையில், ஆதித்யா பிர்லா குழுமத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி பாங்காக்கில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மோடி அங்கு உரையாற்றினார்.

 இந்தியாவின் வளர்ச்சி அதிகரிப்பு

இந்தியாவின் வளர்ச்சி அதிகரிப்பு

அங்கு மோடி பேசுகையில், உலக வங்கியின் ஈஸி ஆப் டூயிங்க் பிசினஸ் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திரமோடி தெளிவுபடுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக மற்றவர்கள் வீழ்ச்சியடையும்போதும் இங்கு பல விஷயங்கள் உயர்கின்றன என்றும், இங்கு வியாபாரம் செய்வது எளிது என்றும், வாழ்க்கை எளிமை, அன்னிய நேரடி முதலீடு, முதலீடு, வனப்பகுதி காப்புரிமை, உற்பத்தி திறனும் அதிகரித்து வருகிறது, ஆக இந்தியா உலகளவில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக விளங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

 வரித் துறையில் பல சீர்திருத்தம்

வரித் துறையில் பல சீர்திருத்தம்

மேலும் இந்தியாவில் கடினமாக உழைத்து அரசுக்கு வரி செலுத்தும் வரி செலுத்துவோர் மதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக வரிவிதிப்பு துறையில் அரசு என்னுடைய அரசு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது, மேலும் மக்களுக்கு ஏற்ற வரி செலுத்தும் நிர்வாக முறை இந்தியாவில் இருப்பது கண்டு நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 எங்கள் பொருளாதார இலக்கு $5டில்லியன்

எங்கள் பொருளாதார இலக்கு $5டில்லியன்

இது தவிர நாங்கள் மக்களுக்கு ஏற்றவகையில் பணியாற்றி வருகிறோம். இங்கு அரசு பணிகளில் கால தாமதம், ஊழல் ஓழிப்பு அரசு, அதிகாரிகளூடன் சேர்ந்து முதலீட்டாளர்கள் ஊழல் செய்தல் போன்றவை குறைந்து வருகிறது என்றும் கூறியுள்ளார் மேலும் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு. கடந்த 2014ம் ஆண்டு என்னுடைய ஆட்சி அமையும் போது 2 டிரில்லியன் டாலராகத் தான் பொருளாதாரம் இருந்தது.

 கடந்த 5 ஆண்டுகளில் $3 டிரில்லியன் வளர்ச்சி

கடந்த 5 ஆண்டுகளில் $3 டிரில்லியன் வளர்ச்சி

ஏன் கடந்த 65 வருடங்களாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2 டிரில்லியன் டாலராகவே இருந்தது. ஆனால் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 3 டிரில்லியன் டாலர்களாக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் பல மாற்றம் செய்திருக்கிறோம். மக்களுக்கு நேரடி உதவிகளை அளிக்க நேரடி வங்கி பரிமாற்ற முறையால் இடைத்தரகர்களும் திறமையின்மையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+