கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். 88 வயதான அவருக்கு சுவாச பாதையில் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் விரும்பக் கூடிய ஒரு தலைவராக இருந்தார். அதற்கு அவருடைய எளிமையும் அனைவரையும் பரிவுடன் அவர் அணுகிய முறையுமே காரணம் ஆகும்.

போப் பிரான்சிஸுக்கு சிறுவயதிலிருந்தே பொது வாழ்க்கையின் மீது நாட்டம் அதிகம். எளிமையான வாழ்க்கை வாழ்வதையே அவர் விரும்பினார் . 2013 ஆம் ஆண்டு 16 வது போப் பெனெட்டிக் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை அசிசியின் பிரான்சிஸின் நினைவாக அவருக்கு பிரான்சிஸ் என பெயர் வழங்கப்பட்டது.
தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை என்ற பெருமை போப் பிரான்சிஸுக்கு கிடைத்தது. இவர் பதவிவகித்த காலத்தில் உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அனைவரும் சமம் என்ற சமூக நீதிக் கொள்கையை தீவிரமாக பின்பற்றியவர் போப் பிரான்சிஸ்.
ஆடம்பரமாக வாழ்வதற்கான பல்வேறு சலுகைகளும் வாய்ப்புகளும் இருந்தபோதும் அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். இதனால் அனைவருக்கும் பிடித்த ஒரு தலைவராக திகழ்ந்தார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் , அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர். போர்களை முடிவுக்கு கொண்டு வந்து உலகில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.
போப் பிரான்சிஸை பொருத்தவரை அவருக்கு அந்தப் பதவிக்கென சம்பளம் இருக்கிறது. மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றவர். இந்திய ரூபாய் மதிப்பில் மாதம் 27 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும். ஆனால் போப் பிரான்சிஸ் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவருக்கு வந்த சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்தார்.
இதற்கு முன்பு இருந்த எந்த போப்பும் செய்யாத ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இவர் போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே கார்டினல் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அப்போது கூட தனக்கு வழங்கப்பட்ட சம்பளங்களை வேண்டாம் என மறுத்தாராம். தனக்கென எந்த ஒரு ஆடம்பர செலவுகளையும் செய்ய வேண்டாம் என தேவாலய நிர்வாகங்களுக்கு கூறி விடுவாராம். அப்படிப்பட்ட எளிமையான தலைவரை தான் உலகம் தற்போது இழந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications