அமெரிக்காவின் கிழக்கு மற்றும் வளைகுடாவில் உள்ள துறைமுகங்களில் பணிபுரியும் சுமார் 50,000 பேர் கொண்ட சர்வதேச லாங்ஷோர்மென்ஸ் அசோசியேஷன் (ILA) உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது, இதன் காரணமாக சப்ளை செயின் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ILA ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டம் குறித்து அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
துறைமுக தொழிலாளர்களின் போராட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இது, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக அதிகாரி மற்றும் வர்ஜீனியா துறைமுக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் மரிடைம் அலையன்ஸ் (USMX) அமெரிக்க சரக்கு போக்குவரத்து இயக்கத்தை சீர்குலைக்கும் வேலைநிறுத்தத்தைத் தடுக்க சர்வதேச லாங்ஷோர்மென்ஸ் அசோசியேஷன் (ILA) உடன் அவசர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. USMX என்பது பெரிய கப்பல் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமையாளர்களைக் கொண்ட அமைப்பாகும். இதன் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் வேலைப் பாதுகாப்பு போன்றவற்றைக் கோரி இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ILA-இன் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டின்படி, ஊதிய உயர்வு, கன்டெய்னர் ராயல்டி ஃபண்ட் மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கோருகின்றனர், USMX உடன் அக்டோபருக்குள் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால் கடற்கரை முழுவதும் வேலைநிறுத்ததை மேற்கொள்வதாகக் கூறி இருந்தனர். அதனடிப்படையில் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் மைனே முதல் டெக்சாஸ் வரையிலான அனைத்து சரக்கு துறைமுகங்களிளும் பல்வேறு வகையான சரக்குகளின் போக்குவரத்தை நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் வாழைப்பழங்கள் முதல் ஐரோப்பிய பீர், ஒயின் மற்றும் மதுபானங்கள், மரச்சாமான்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஐரோப்பிய ஆட்டோக்கள், அத்துடன் அமெரிக்க தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவையான பாகங்கள் போன்றவற்றை பாதிக்கலாம். மேலும் இந்த சரக்குகளைக் கையாள அமெரிக்க துறைமுக பணியாளர்கள் வேலையில் இருக்க வேண்டும். இது அமெரிக்க நிறுவனங்களின் விற்பனையையும் பாதிக்கிறது.
அடுத்த வார தொடக்கத்தில் புதிய ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், உணவு மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இயக்கத்தை நிறுத்தக்கூடும். இது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
நீடித்த வேலைநிறுத்தம் சாக்லேட், ஆல்கஹால், வாழைப்பழங்கள் மற்றும் செர்ரி போன்ற பிரபலமான பழங்கள் மற்றும் சில வாகனங்கள் போன்றவற்றின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று CNN தெரிவித்துள்ளது. இது இன்னும் கிடைக்கக்கூடிய பொருட்களின் விலையை அதிகரிக்கலாம்.
மேலும், மதுபானங்கள் குறிப்பாக குறையும் வாய்ப்புள்ளது, ஏனெனில் அமெரிக்கா தனது பீர், ஒயின் மற்றும் மதுபானங்களில் கணிசமான பகுதியை இந்தத் துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்கிறது. அசோசியேட்டட் பிரஸ் கருத்துப்படி, வேலைநிறுத்தம் நவம்பர் வரை நீடித்தால், சுமார் 150,000 கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை பாதிக்கக்கூடும், இது பிற வணிகங்களை பாதிக்கும். பல தொழில்களில் இத்தகைய இடையூறுகள் பணவீக்கத்தை அதிகப்படுத்தி, அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications