நம் சித்தப்பா நேசமணிக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் கம்பெனிகள்..? #PrayForNesamani..!

இண்ட்ரோ கொஞ்சம் க்ளிஷேவாக இருக்கலாம். ஆக நேரமில்லாதவர்கள் நேரடியாக ஸ்லைடுக்கே போய்விடலாம். ஒருவருக்காக தன் குடும்பம் அழுதால், அவன் நல்ல குடும்பஸ்தன். ஒரு அதிகாரிக்காக ஒரு ஊர் அழுதால் அவன் யோக்கியஸ்தன். ஒரு பதவியில் இருக்கும் நபருக்காக ஒரு ஊரே அழுதால் அவன் நல்ல தலைவன்.

ஆனால் இங்கு ஒருவருக்காக உலகமே அழுதால்... அவன் ஒரு நல்ல கலைஞன். அப்படிப்பட்ட கலைஞனுக்காக, தாத்தா பாட்டியாக இருக்கும் தனி மனிதன் தொடங்கி கார்ப்பரெட் கம்பெனிகள் வரை நலம் விசாரிக்கிறார்கள்.

வேறு யாரு, கடந்த நான்கு நாட்களாக இந்திய இணையத்தை மோடிக்கு ஒரு படி மேலே அமர்ந்து 3 நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கும் நம் சித்தப்பா நேசமணியப் பத்தித் தான் பேசப் போறோம். சித்தப்பாவுக்கு கார்ப்பரேட் கம்பெனிங்க எல்லாம் எப்படி நலம் விசாரிச்சிருக்காய்ங்க..? வாங்க பாப்போம்.

AGS Entertainment

AGS Entertainment

விஜயண்ணாவின் 63-வது படத்தைத் தயாரிக்கும் கல்பாத்தி குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி "என்னங்க நம்ம சித்தப்பா நேசமணியே படுத்த படுக்கையா இருக்காப்புல, இப்ப போய் விஜயண்ணாவோட 63-வது படத்தப் பத்திக் கேக்குறீங்க..? போய் மொதல்ல நம்ம நேசமணிக்காக ப்ரே பண்ணுங்க... #PrayForNesamani" எனக் கொந்தளித்திருக்கிறார்.

NGK

NGK

அண்ணன் நேசமணி விரைவில் குணமடைந்து என் ஜி கே படத்தை நாளை தியேட்டருக்கு வந்து ரசிப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்..! ஆதலால் #PrayForNesamani ப்ரோ என ரத்தம் தெறிக்க தெறிக்கச் சொல்லி இருக்கிறார்கள் என் ஜி கே படக்குழுவினர்கள்.

Chennai Super Kings

Chennai Super Kings

எங்க அண்ணன் நேசமணிய தன் நொடிப் பொழுது Reaction time-த்தால காப்பாத்த முடிஞ்ச ஒரே நபரும் (தோனி) இப்போ அவசர வேலையா இங்கிலாந்துல இருக்காப்புல. அய்யஹோ சித்தப்பா நேசமணிக்காக பிரார்த்திப்போம் #PrayForNesamani எனக் கொந்தளித்திருக்கிறார்கள் மஞ்சள் ராணுவ சி எஸ் கே-வினர்கள்.

மரியாதை கொடுத்த Google

மரியாதை கொடுத்த Google

உலகின் தலை சிறந்த பெயிண்டர்களில் ஒருவராக நம் சித்தப்பா நேச மணியையும் சேர்த்து கெளரவப்படுத்தி இருக்கிறது கூகுள்-ன்னு சொல்றாய்ங்கப்பு. போட்டோ எல்லாம் ஆதாரமா காட்டுறாய்ங்க. என்னப்பா சுந்தரு (Sundar pichai).. நம்ம சித்தப்பா நேசமணிக்கு எல்லாம் இந்த Google Doodle இல்லையா..? எனவும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்களாம். இவர்கள் சொல்வதைக் கேட்டு கூகுளில் தலை சிறந்த பெயிண்டர்கள் பட்டியலத் தேடுனா நம்ம சித்தப்பா பேர் வரவே இல்லையப்பா..? இதையும் கொஞ்சம் என்னன்னு பாருப்பு என சுந்தர் பிச்சைக்கு ஸ்பெஷல் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்களாம்...!

Nippon Paint

Nippon Paint

"சித்தப்பா நேசமணி தலையில சுத்தியலப் போட்ட கிச்சுனமூர்த்திய சும்மா விடக் கூடாதுங்க. முறையா தொழில் தெரியாத Unprofessional Guy... ஆனா எங்க நிப்பான் பெயிண்டர்கள் ரொம்ப Professional-ங்க. கச்சிதமா, சத்தம் காட்டாம பெயிண்ட் அடிப்பாய்ங்க. ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்களேன்..."ன்னு ட்விட்டர்ல கேட்டிருக்காய்ங்க. மறக்காம #PrayForNesamani டேக்கையும் போட்டிருக்காய்ங்கப்பு. பெயிண்டருக்கே பெயிண்டா..?

Prosmack

Prosmack

போன மாசம் தாங்க நேசமணி சித்தப்பா தன்னோட பெயிண்ட் பிசினஸ டெவலெப் பண்ண ஒரு வெப் சைட்டுக்கு ஆர்டர் கொடுத்தாரு. அவரோட புது வெப் சைட்டுக்கு நாங்க தான் Design, Development, Digital Marketing and Branding எல்லாமே பண்ணோம். இப்ப தான் புதுசா ஒரு அரண்மணைக்கு பெயின்ட் அடிக்கிற காண்டிராக்ட் கெடச்சிருக்குன்னு சொல்லி சந்தோஷமா வேலைக்கு போனாப்புல. ஆனா கொடுக்க வேண்டிய 35,000 ரூபாய் காச இன்னும் கொடுக்கல... அதுக்குள்ள போன இடத்துல இந்த கிச்சுனமூர்த்தி சுத்தியல சித்தப்பா தலையில போட்டான், வெளங்காத பய. இப்ப பேமெண்ட் யார்கிட்ட வாங்க... சொல்லுங்க...? அதான் இந்த #PrayForNesamani. யோவ் சித்தப்பு சீக்கிரம் வாயா... உன் பாக்கி 35,000 ரூவா அப்படியே இருக்கு.

Sony Music

Sony Music

உலகமே நம் சித்தப்பா நேசமணிக்காக பிரார்தித்துக் கொண்டிருக்கிறது. சித்தப்பா நேசமணிக்காக வருந்தி வாடும் அண்ணணின் விழுதுகளை சமாதானப்படுத்தும் விதத்தில் மனதுக்கு இதமான (Sony Music) பாடல்களைத் தொகுத்திருக்கிறோம். பாடல்களைக் கேட்க க்ளிக்கவும்:

அண்ணன் நேசமணிக்காக பிரார்திப்போம்... #PrayForNesamani என இரு கரம் கூப்பி, ஒரு சொட்டுக் கண்ணீரோடு, ஒத்த ரோசாவையும் வைத்து உருகி இருக்கிறார்கள் சோனி மியூசிக் நிறுவனத்தினர்கள்.

 

Cadd Centre

Cadd Centre

சித்தப்பா நேசமணி தலையில் விழுந்த சித்தியைப் பற்றி, விவாரமாக படம் போட்டு அனாலிசிஸ் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இது என்ன மாதிரியான ஆயுதம், இந்த ஆயுதத்தின் பயன்பாடு என்ன, யார் மீது தாக்க பயன்படுத்தப்பட்டது என படம் போட்டு விளக்கி இருக்கிறார்கள். அதோடு சித்தப்பா விரைவில் குணமடைந்து வேலைக்கு வந்து சுத்தியை கையில் பிடிக்க... பிரார்த்தனைகளையும் செய்திருக்கிறார்கள். #PrayForNesamani.அரியோ சம்போ..!

ஒரு வரி

ஒரு வரி

ஒரு நபர், சினிமாவில் இருந்து வெகு நாட்களாக விலகி இருக்கிறார். ஆனால் அவரைப் பார்க்காமல், அவர் வார்த்தைகளைப் பேசாமல், அவருடைய ஆஹான்...களை டைப்பால், அவர் வசனங்களை அவர் தொனியில் பயன்படுத்தாமல்... நம்மால் ஒரு நாளை முழுமையாகக் கடக்க முடியவில்லை. இணையத்தைத் திறக்க முடியவில்லை. சர்வம் நேசமணி மயம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+