மாஸ்கோ: அமெரிக்காவும் ரஷ்யாவும் சர்வதேச அளவில் எதிரி நாடுகளாக இருக்கின்றன. தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அதிபர் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி கண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மாறாக டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைகளை ரஷ்யா கண்காணிக்கும் என்றும் அதன் அடிப்படையில் அமெரிக்காவுடன் உறவு குறித்து முடிவெடுக்கும் என்றும் ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு மோசமான நிலையை அடைந்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அமெரிக்க அரசு ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையினான உறவு மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஷ்ய அரசு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ, டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது தலைமையின் கீழ் இயங்கும் அரசின் நடவடிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து கண்காணிக்கும் எனக் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் உக்ரைனில் நடக்கும் சண்டையை தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஷ்ய அரசு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் திறமை அமெரிக்காவிற்கு இருக்கிறது, ஆனால் அமெரிக்கா தான் இப்படி ஒரு போரையே உண்டாக்கியது என கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்று பேசுவது பின்னர் அதிபராக பதவி ஏற்ற பிறகு வேறு ஒன்றை நடைமுறைப்படுத்துவது என்பது தற்போது வழக்கமாகிவிட்டது என தெரிவித்துள்ள ரஷ்ய அரசு, ஏற்கனவே ரஷ்யா அமெரிக்கா இடையிலான உறவு மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது என கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் ரஷ்ய அரசு மறுத்துள்ளது.
அமெரிக்க அரசு தங்களுன் நேரடியாகவும் மறைமுகமாகவும் போரில் ஈடுபட்டுள்ளது. இப்படி ஒரு நாட்டின் அதிபருக்கு எப்படி எங்கள் நாட்டு அதிபர் வாழ்த்து கூறுவார் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆறு வாரங்கள் கழித்து அவருக்கு புதின் வாழ்த்து தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications