ஹவுஸ்டன்: அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் இன்று நடக்கவிருக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் கலந்து கொள்ள விருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார் என்றும் கருதப்படுகிறது.
தற்போது மொத்த எண்ணெய் உபயோகத்தில் 80%, இந்தியா இறக்குமதி செய்து வரும் நிலையில், சவுதி அரேபியா இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 20% விலையேற்றம் கண்டது கச்சா எண்ணெய் விலை. இதனால் பெரிய அளவில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த இந்தியாவுக்கு, இது பெருத்த அடியாகவே கருதப்பட்டது.
எண்ணெய் விலை அதிகரிக்கலாம்
எண்ணெய் விலை அதிகளவு விலையேற்றம் கண்டாலும், போதிய இறக்குமதி இருக்குமா என்ற நிலையிலேயே பரவாலாகப் பல தரப்பிலும், பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வந்தது. அதிலும் இந்தியா எப்போது ஈரானை தவிர்த்து மற்ற நாடுகளிடம் எண்ணெய் வாங்க ஆரம்பித்ததோ, அதிலிருந்தே பிரச்சனையாகவே இருந்து வரும் நிலையில், சவுதியின் எண்ணெய் ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்டதையடுத்து, எண்ணெய் இறக்குமதியும் சரியும் எனவும், இதனால் இங்கு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்பட்டது.
எண்ணெய் பிரச்சனைக்கு மாற்று என்ன?
இதனாலேயே தற்போது வேறு நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையிலேயே ஹவுஸ்டனில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார் என்றும், இப்பிரச்சனை குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கபடலாம் என்றும் கருதப்பட்டது.
முதலீடு அதிகரிக்கலாம்
இந்த நிலையிலேயே அமெரிக்காவில் உள்ள எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் செய்யப்பட உள்ள முதலீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும், இந்த கூட்டத்தில் மின்னணு வாகன நிறுவனங்கள், கச்சா எண்ணெய், டீசல் உற்பத்தி நிறுவனங்கள், மாற்று எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்றும், உலகின் முன்னணி நிறுவனங்களாக எமெர்சன், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தெளிவான அறிக்கை ஏதும் இல்லை
எண்ணெய் நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையில், அந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது எத்தகைய முதலீடு, எதில் முதலீடு செய்யப்போகிறார்கள், கச்சா எண்ணேய் இறக்குமதி பற்றி எதுவும் பேசப்பட்டதா? என்று இது குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications