சர்வதேச நிதி சந்தைகள் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர் காரணமாக முதலீட்டு சந்தையில் மிகவும் அமைதியாக ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகி வருகிறது. ஏற்கனவே ரெசிஷன் குறித்து பொருளாதார வல்லுனர்கள் பேசி வரும் வேளையில், அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பு பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் தாக்குதல் மூலம் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டு தற்போது அதன் விலை வேகமாக உயர்ந்து, உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், உலகளாவிய முதலீட்டு துறையில் புதிய பிரச்சனை ஒன்றும் உருவாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பெரிய தனியார் கடன் நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதித்ததாக வெளிவந்த தகவல்கள் முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான BlackRock தனது ஒரு கடன் நிதியில் (debt fund) இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப பெறுவதில் வரம்புகளை விதித்துள்ளது. இதேபோல் Morgan Stanley மற்றும் Cliffwater LLC ஆகிய நிறுவனங்களும் தங்களின் தனியார் கடன் நிதிகளில் (private credit funds) இருந்து முதலீட்டாளர்கள் அதிக அளவில் பணத்தை திரும்ப பெற முயன்றதால், அந்த பணத்தை உடனடியாக வழங்க முடியாது என அறிவித்து பணத்தை வெளியேற்றுவதற்கான லிமிட் செட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனியார் கடன் துறையில் முக்கிய நிறுவனமாக விளங்கும் Blue Owl தனது முதல் தனியார் சில்லறை கடன் நிதியில் முதலீட்டாளர்கள் பணத்தை எடுப்பதை நிரந்தரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
$2 டிரில்லியன் மதிப்புள்ள தனியார் கடன் சந்தை
உலகளவில் தனியார் கடன் (Private Credit) சந்தை தற்போது சுமார் 2 டிரில்லியன் டாலர் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த சந்தையில் முதலீட்டாளர்கள் பொதுவாக வங்கிகளை விட நேரடியாக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதிகளில் பணம் முதலீடு செய்கிறார்கள். இதில் ரிஸ்க் அதிகம், அதேபோல் லாபமும் அதிகம்.
தற்போது பொருளாதார சூழ்நிலை ஏதுவாக இல்லாத காரணத்தால் ரிஸ்க் எடுத்தும் செய்யப்படும் முதலீடுகளில் அனைத்திலும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது தனியார் கடன் சந்தை பண்டுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஓரே நேரத்தில் ரிஸ்க் சார்ந்த முதலீடுகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்பதாலும், அப்படி எடுத்தால் பெரும் நிதி இழப்பும், பாதிப்பு ஏற்படும் காரணத்தாலும் பணத்தை வெளியேற்றும் முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள். இதை முதலீட்டு சந்தையில் பொருளாதாரம் சரியும் ஒரு சிக்னலாக பார்ப்பதே தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.
தனியார் கடன் நிதிகளில் என்ன நடக்கிறது?
INVasset PMS நிறுவனத்தின் வணிகத் தலைவர் Harshal Dasani கூறுகையில், தனியார் கடன் நிதிகள் பொதுவாக நிறுவனங்களுக்கு நீண்ட காலத்திற்கு கடன் வழங்குகின்றன. இந்த கடன்கள் இரண்டாம் நிலை சந்தையில் எளிதாக விற்க முடியாதவை. அதாவது இவை உடனடியாக பணமாக மாற்ற முடியாத முதலீடுகள் ஆகும்.
பொதுவாக பங்கு அல்லது பத்திர சந்தை நிதிகளில் முதலீட்டாளர்கள் தினசரி வர்த்தகம் செய்ய முடியும். ஆனால் தனியார் கடன் நிதிகளில் வழங்கப்படும் கடன்கள் பொதுவாக அதன் காலாவதி வரை வைத்திருக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் மதிப்பீடும் தினசரி அல்லாமல் கால வரையறை அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகிறது.
பணம் திரும்ப பெற கட்டுப்பாடு ஏன்?
ஒரே நேரத்தில் அதிக முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப பெற முயன்றால், அந்த நிதி நிறுவனங்களுக்கு உடனடியாக சொத்துகளை விற்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால் அந்த கடன்களை விரைவாக விற்க வேண்டுமானால் பெரிய தள்ளுபடி விலையில் விற்க வேண்டியிருக்கும்.
இதனால் நிதியில் தொடர்ந்திருக்கும் மற்ற முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாம். இதை தவிர்க்கும் நோக்கத்திலேயே சில நிறுவனங்கள் "Redemption Gates" அல்லது காலாண்டு அடிப்படையிலான பணம் திரும்ப பெறும் வரம்புகளை கொண்டு வந்துள்ளன.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்கும் முயற்சியாக இந்த கட்டுப்பாடுகள் பார்க்கப்படுகின்றன. எனவே இது உடனடி நிதி நெருக்கடி இல்லை என்றாலும், உலகளாவிய பொருளாதார uncertainty அதிகரித்திருப்பதை இந்த நிகழ்வுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
More From GoodReturns

அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் IRAN..!! கூகுள், மைக்ரோசாப்ட், IBM-ஐ கட்டம் கட்டி அடிக்க முடிவு..!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications

