உக்ரைன் மீது போர் தாக்குதலை 2022 முதல் நடத்தி வரும் ரஷ்யா-வின் பொருளாதாரத்தில், தற்போது ரெசிஷன் ஏற்படும் நிலை உள்ளதாக, ரஷ்ய பொருளாதார அமைச்சர் மக்ஸிம் ரெஷெட்னிகோவ் (Maxim Reshetnikov), இன்று அந்நாட்டில் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பன்னாட்டு பொருளாதார கூட்டத்தில் பேசிய போது எச்சரித்தார்.
ரஷ்ய பொருளாதாரம் கொரோனா தொற்று காலத்தில் இருந்தே பாதிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் மீதான போர் தாக்குதலுக்கு பின்பு உலக நாடுகள் விதித்த தடை உத்தரவுகள் காரணமாக கடுமையாக பாதிக்க துவங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களில் உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் தாக்குதல் அதிகரித்திருக்கும் வேளையில் அந்நாட்டின் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் தருவாயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், ரஷ்ய மத்திய வங்கி, 2022-க்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை இந்த மாதம் 21%-லிருந்து 20%-ஆக குறைத்து பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் மக்கள் முன்பை விட குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
ரஷ்யாவில் இருக்கும் அதிகப்படியான வட்டி விகிதங்கள், அந்நாட்டில் புதிய முதலீடு செய்வதை தடுப்பதாகவும், இதனால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தமடைய செய்வதாகவும் தொழிலதிபர்களும், தொழிற்துறையினரும் பல மாதங்களாக புகார் கூறி வந்த நிலையில் தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
2025-ன் முதல் காலாண்டில் ரஷ்ய பொருளாதார வளர்ச்சி 1.4%-ஆக சரிந்துள்ளது, இது 2024ல் பதிவான 4.5% மற்றும் 2021ல் பதிவான 4.3%-ஐ விட குறைவாகும். இந்த பொருளாதார மந்தநிலை, உக்ரைன் போரால் மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளால் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இந்த போரின் காரணமாக ரஷ்ய அரசுக்கு அதிகப்படியான செலவுகளும், நிதி நெருக்கடியும் உருவாகியுள்ளது.
2025-ல் ரஷ்யாவின் பாதுகாப்பு துறை செலவுகள் அந்நாட்டின் மொத்த GDP-யில் 8%-ஐ தாண்டியுள்ளது. இது சோவியத் காலத்துக்குப் பிறகு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தரவுகள் கூறுகிறது. இதனால் அந்நாட்டின் கல்வி, சுகாதாரம் துறைக்கான செலவுகள் குறைந்து வருகிறது.
2022 உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு ரஷ்ய மத்திய வங்கிக்கு சொந்தமான 300 பில்லியன் டாலர் சொத்துக்கள் உலக நாடுகளால் முடக்கப்பட்டு உள்ளன. இதேவேளையில் 2025-ல் ரஷ்ய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 48.8 டாலர் வரையில் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் அரசு வருவாய் குறைக்கும் என்ற நிலை உள்ளது.
ரஷ்யாவில் போர், மற்றும் மக்கள்தொகை சரிவால் அந்நாட்டில் வேலையின்மை 2.3% ஆக இருக்கிறது. ஆனால் இதேவேளையில் 73% நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாக அரசிடம் புகார் செய்துள்ளது.
2021-ல், ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி 4.3% ஆக இருந்தது, 2025-ன் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 1.4%-ஆக சரிந்தது, இது 2024-ன் 4.5% (Q4) மற்றும் 5.4% (Q1) ஐ விட குறைவாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications