விளாடிமிர் புதின் அதிரடி.. நெஸ்லே வர்த்தகத்தை மொத்தமாக கைப்பற்றிய ரஷ்ய அரசு!

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் 2022ஆம் ஆண்டில் துவங்கி இன்று வரையில் தொடர்ந்து தீவிரமாக நடந்து வரும் வேளையில், ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடுகளும், தடைகளும் தொடர்ந்து கடுமையாகி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகின் முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றான நெஸ்லே நிறுவனத்திந் ரஷ்ய வர்த்தகத்துக்கு எதிராக புதின் தலைமையிலான அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் உடனான போர் துவங்கி பின் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதித்த போது ரஷ்யாவில் இயங்கி வரும் மேற்கத்திய நிறுவனங்களின் வர்த்தகத்தை மொத்தமாக முடக்கி, ரஷ்ய தொழிலதிபர்கள் கைப்பற்றினர்.

விளாடிமிர் புதின் அதிரடி.. நெஸ்லே வர்த்தகத்தை மொத்தமாக கைப்பற்றிய ரஷ்ய அரசு!

தற்போது ரஷ்ய அரசு எஞ்சியுள்ள நிறுவனங்களையும் முடக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சுவிஸ் நாட்டின் நெல்லே மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Auchan, Lemana Pro மற்றும் FM Logistic நிறுவனங்களின் ரஷ்ய வர்த்தகம், நிறுவனம், கட்டமைப்புகளை ரஷ்ய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இந்த ஐரோப்பிய நிறுவனங்களின் ரஷ்ய வர்த்தகம் மொத்தமும் L.E.V. Management என்ற ரஷ்யாவை சேர்ந்த நிறுவனத்தின் தற்காலிக கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Nestle நிறுவனம் 1990களில் இருந்தே ரஷ்யாவில் இயங்கி வந்தாலும், உக்ரைன் உடனான போர் துவங்கியதில் இருந்து அதன் விரிவாக்கத்தையும், செயல்பாடுகளையும் ரஷ்யாவில் குறைத்துள்ளது. ஆயினும் ரஷ்யாவில் தற்போது நெஸ்லே 6 தொழிற்சாலைகளும், 7000 ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

மேலும் ரஷ்ய வர்த்தகம் முடங்கிய காரணத்தால் நெஸ்லே நிறுவனத்திற்கு அதன் மொத்த வர்த்தகத்தில் இருந்து வெறும் 1 சதவீதம் அளவிலான பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உக்ரைன் போருக்கு முன்பு 2 சதவீதமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+