உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக தீவிரமாக இருக்கிறார். இந்த போர் தொடர்பாக அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே மிக முக்கியமான ஒரு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
எதிரெதிர் நாடுகளாக இருக்கக்கூடிய அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின் ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொண்டனர் .கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பை அடுத்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது இருவருமே செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கூட்டத்தில் நடந்த விஷயங்களை மட்டும் அறிவித்து விட்டு வெளியேறினர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. மூன்று மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தியும் உக்ரைன் விவகாரத்தில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கூட ஏற்படவில்லை. உக்ரைன் போர் விவகாரம் தொடர்பான இந்த பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புதினும் டிரம்ப்பும் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அது என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை . ஆனால் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பதை மட்டும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிபர்கள் மட்டுமல்ல இருநாட்டு பிரதிநிதிகளும் கூட செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் கிளம்பிவிட்டனர். முன்னதாக இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது புதின் அமெரிக்கா ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு இருநாட்டு பேச்சுவார்த்தையும் நடக்காத சூழலில் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல மிகவும் அவசியமான ஒன்று என கூறினார்.

உக்ரைனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பாதையை ஏற்படுவதற்கான ஒரு கூட்டமாக இது இருந்தது என்றும் தெரிவித்தார். இந்த போரை நிறுத்த வேண்டும் என்பதுதான் ரஷ்யாவின் எண்ணம் என்றும் ஆனால் அதற்கு மூல காரணமாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்றும் புதின் அப்போது தெரிவித்தார்.
மேலும் டிரம்பின் நட்பு ரீதியிலான அணுகுமுறையை பாராட்டுவதாக அப்போது புதின் கூறினார். டிரம்பை பொறுத்தவரை னார் ஒரு ஒப்பந்தம் வரும் வரை எந்த ஒப்பந்தமும் ஏற்படாது என சூசகமாக தெரிவித்தார். இந்த கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது பல்வேறு விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது, ஆனால் சில விஷயங்களில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறினார். விரைவில் அந்த விஷயங்கள் குறித்து ஒரு உடன்பாடுக்கு வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களோடு தான் பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அடுத்த கட்ட ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் என புதின் அறிவித்தார். டிரம்ப் மாஸ்கோவுக்கு வருகை தர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
உலகமே உற்றுநோக்கிய ஒரு சந்திப்பு முக்கியமாக உக்ரைன் போர் பற்றிய ஒரு சந்திப்பு ஆனால் அதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை, என்ன பேசினோம் என்பதை வெளிப்படையாகவும் அறிவிக்கவில்லை, செய்தியாளர்களை கேள்வி கேட்கவே அனுமதிக்கவில்லை என பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications