ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தெளிவான முடிவுகளை மேற்கத்திய உடன் எடுக்காதப்படாத நிலையில், பொறுமையை இழந்த விளாடிமிர் புதின் ஏற்கனவே வியாழக்கிழமை (24-02-2022) ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியில் கைப்பற்றிய டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) வாயிலாக உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போர் தொடுக்க உத்தரவிட்டார்.
உக்ரைன் மீது போர்
மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை புடின் உடன் சேர்ந்து ரஷ்ய பாதுகாப்புத் துறை இன்று காலையில் எடுத்த நிலையில், ரஷ்யா அதிபர் தன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
பீரங்கி வெடிக்கத் துவங்கியது
புடின் தனது பேச்சை முடித்த அடுத்த நொடியில் கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து குண்டுகள் பறக்கத் துவங்கியது, பீரங்கி வெடிக்கத் துவங்கியது. இதேவேவையில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சமாதான பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதைப் பொருட்படுத்தவில்லை.
உலக நாடுகளுக்கு மிரட்டல்
மேலும் உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் அனைத்தும் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் ஆதரவு அளிக்கும் நிலையில், இன்று புடின் பேசுகையில், ரஷ்யாவின் செயலுக்கு எந்த நாடு தடையாக இருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திராத பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் கோரிக்கை
உக்ரைன் நேட்டோவில் இணைவதைத் தடுக்கவும், மாஸ்கோ பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் ரஷ்யா வைத்த கோரிக்கையை, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புறக்கணிப்பதே இந்த பேருக்கு காரணம் என குற்றம் சாட்டினார், உக்ரேனிய படைவீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுவிட்டால் போர் மண்டலத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேற முடியும் என்றும் புடின் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications