அமெரிக்க பொருளாதாரம் மோசமான காலத்தை எதிர்கொண்டு இருக்கிறது என 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியை கணித்த ரே டாலியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்ஜ்வாட்டர் என்ற நிறுவனத்தின் நிறுவனர் தான் ரே டாலியோ. இவர் 2008 பொருளாதார நெருக்கடியை மிக சரியாக கணித்தவர். இவர் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நெருங்கி விட்டதாகவும் தற்போதைய பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்கள் தவறாக நிர்வகிக்கப்பட்டால் மிக மோசமான நிலைமைக்கு அமெரிக்கா செல்லும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். என்பிசி செய்தி தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ரே டாலியோ, இப்போது நாம் முடிவெடுக்கும் கட்டத்தில் இருக்கிறோம் மந்த நிலைக்கு மிக அருகில் வந்து விட்டோம் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை சரியாக கையாளாமல் விட்டு விட்டால் மந்த நிலையை விட மோசமான ஒன்றை நோக்கி அமெரிக்க பொருளாதாரமும் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் ஒரு முக்கியமான திருப்புமுனையை நெருங்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் மந்த நிலையை விட மோசமான நிலைக்கு செல்லலாம் என எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அளவில் பேச பொருளாக மாறி இருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. இந்த வரி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பினை டிரம்ப் அரசு வெளியிட்டு இருக்கிறது. இது அமெரிக்க பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் ரே டாலியோ இப்படி ஒரு பதிலை வெளியிட்டு இருக்கிறார்.
உள்நாட்டில் இருக்கும் அரசியல் பிளவு, அதிகரிக்கும் கடன் மற்றும் மாறி வரும் உலகளாவிய அதிகார சூழல் ஆகியவை ஏற்கனவே வரலாற்றில் காணப்பட்ட ஒரு வடிவத்தை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே பல்வேறு ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்றும் 1930 களில் ஏற்பட்டது போலவே அவை இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது உலக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய இந்த மாற்றங்கள் குறிப்பாக வளர்ந்து வரும் சக்திகள் இடமிருந்து வரும் சவால்கள் பொருளாதாரத்தை மிக மிக சீர்குலைக்கும் என தெரிவித்துள்ளார். இந்த அழுத்தங்களை தவறாக கையாள்வது நெருக்கடியை ஆழப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். நாட்டின் நிதி நிலையை உறுதிப்படுத்த மத்திய பட்ஜெட் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைக்கும் படி அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.
ரே டாலியோ 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியை முன்பே கணித்தவர். இவர் 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரிட்ஜ் வாட்டர் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க நிதி அமைப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதாக எச்சரித்தார். குறிப்பாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அது அமெரிக்க நிதி அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் கூறியிருந்தார். அவரை இந்த கணிப்பை வெளியிட்ட சில மாதங்களிலேயே உலக அளவில் பொருளாதார மந்த நிலை உருவானது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications