259 வங்கி கிளைகளை மூடும் ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து.. என்ன காரணம் தெரியுமா..?
உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து தனது வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறிவரும் நிலையில் பிரிட்டனில் இருக்கும் 259 வங்கி கிளைகளை மூட திட்டமிட்டுள்ளது.
நேட்வெஸ்ட் மற்றும் ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து ஆகிய பிராண்டுகளில் இருக்கும் வங்கி கிளைகளை மூட திட்டமிட்டு வருகிறது.
இதன் மூலம் சுமார் 680 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க கூடும் என் ஆர்பிஎஸ் தெரிவித்துள்ளது.

கிளைகளை மூடுவதன் மூலம் செலவுகளை அதிகளவில் குறைக்கப்படுவதன் மூலம், அத்தொகையை ஸ்மார்ட்போன் சேவைகளில் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2014ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் மொபைல் பரிவர்த்தனைகளி எண்ணிக்கை சுமார் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications