இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மீதான எதிர்பார்ப்பும் வலுவாக காணப்படுகின்றது. தற்போது இங்கிலாந்தில் பணவீக்கம் என்பது 40 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு மெதுவான பொருளாதார வளர்ச்சியே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ரிஷி சுனக்கின் முன் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசி, உணவு பொருட்கள் விலை, எரிபொருள் விலை என பலவும் கடும் உச்சத்தில் காணப்படுகின்றது.
ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் முக்கிய சவால்
வருவாய் வீழ்ச்சி கண்டுள்ள சமயத்தில், விலைவாசியானது உச்சத்தில் உள்ள நிலையில், மக்கள் கடும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் தங்கள் செலவினை குறைக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆக ரிஷி சுனக்கிற்கு விலைவாசியை குறைத்து, நுகர்வினை அதிகரிப்பதே முக்கிய சவாலாக இருக்கும். இதுவே முதல் கட்ட எதிர்பார்ப்பாக இங்கிலாந்து மக்களிடையேயும் எழுந்துள்ளது.
நிறுவனங்களின் எதிர்பார்ப்பு
இங்கிலாந்தில் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் மத்தியில் முடங்கியுள்ள தொழிற்துறையினை மீட்டெடுக்க, நிறுவனங்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. குறிப்பாக கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும், வரியை குறைக்க என்ற பெரும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ரிஷி சுனக்
எனினும் தற்போது இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பொது நிதியினை மேம்படுத்த வேண்டிய நிலையில் சுனக் அரசு உள்ளது. ஆனால் தற்போது இங்கிலாந்து பட்ஜெட்டில் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. ஆக பொது நிதியினை அதிகரிக்க சில வரிகளை அதிகரிக்கலாம். அதேசமயம் செலவினங்களை 58 பில்லியன் பவுண்டில் இருந்து, 50 பில்லியன் பவுண்டாக குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முக்கிய சவால்கள்
எனினும் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போதைக்கு ரிஷக்கிற்கு இருக்கும் பெரும் சவால்களில் ஒன்று, இழந்த பொருளாதார சரிவினை மேம்படுத்துவதாகும். மேலும் லிஸ் டிரஸ்-ன் வரி குறைப்பால் ஏற்கனவே அதல பாதாளம் தொட்ட பிரிட்டன் கரன்சியினை, மீண்டும் மீட்க நடவடிக்கை எடுப்பதும் முதன்மை சவாலாக இருக்கும்.
என்னென்ன திட்டங்கள்?
ரிஷி சுனக் மற்றும் ஹன்ட்-ன் தங்கள் பொருளாதார அறிக்கையினை வெளியிட இரண்டு வாரங்கள் தள்ளி வைத்திருந்தாலும், ஏற்கனவே இது குறித்த நடவடிக்கைகளை இந்த குழு தொடங்கி விட்டது. இதற்கிடையில் ஏற்கனவே சந்தைகள் மீண்டும் வலுவடைய தொடங்கி விட்டன. எனினும் தற்போது வரையில் பிரிட்டன் கடுமையான சூழலையே எதிர்கொண்டு வருகின்றது. நம்பிக்கை என்பது அதிகரித்திருந்தாலும், காரணிகள் எதுவும் மாறவில்லை.
வளர்ச்சி சரியலாம்
கொரோனாவினால் ஏற்பட்ட வீழ்ச்சி, ரஷ்யா -உக்ரைன் பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் பிரிட்டன் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் சமீபத்திய பிரிட்டன் அரசின் கணிப்புகளை விட வளர்ச்சி குறைவாக இருக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது மேற்கொண்டு சுனக் அரசுக்கு சவாலாக இருக்கலாம்.
முக்கிய நடவடிக்கைகள்
இதற்கிடையில் வளர்ச்சியினை மீட்க லிஸ் டிரஸ் குறைத்த வரி குறைப்பில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு செலவினங்கள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 104 வகைகளில் செலவினங்களை குறைக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications