எலக்ட்ரிக் வாகன பிரிவில் டெஸ்லா நிறுவனத்திற்குப் பெரிய போட்டி இல்லாமல் இருந்த நிலையில் அமேசான் நிறுவனர் ஜெப் பைசோஸ் முதலீட்டில் இயங்கும் ரிவியன், இன்னும் பெரிய அளவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குக் கார்களை டெலிவரி செய்யாத நிலையிலும் ஐபிஓ வெளியிட்டு உள்ளது.
இந்த ஐபிஓ மூலம் ரிவியன் யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்தத் திடீர் உயர்வு முக்கியக் காரணம் ஜோ பைடன்.
ரிவியன் ஐபிஓ
அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள ரிவியன் 78 டாலர் விலையில் ஐபிஓ வெளியிட்டது. 10ஆம் தேதி 100.73 டாலருக்குப் பட்டியலிடப்பட்ட ரிவியன் பங்குகள் ஜோ பைடன் இன்பராஸ்டக்சர் மசாதா-வில் கையெழுத்தாக உள்ள நிலையில் ரிவியன் பங்குகள் சுமார் 95 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மொத்த சந்தை மதிப்பீடு
இதன் மூலம் ரிவியன் பங்குகள் சுமார் 149.36 டாலர் வரையில் உயர்ந்து இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பீடு சுமார் 127 பில்லியன் டாலர் லரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகின் 3வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக ரிவியன் உயர்ந்துள்ளது. டெஸ்லா, டோயோட்டா அடுத்தாக ரிவியன் உயர்ந்துள்ளது.
இன்பராஸ்டக்சர் மசோதா
ஐபிஓ-வுக்குப் பின்பு ரிலியன் பங்குகள் 50 சதவீதம் வரையில் உயர மிக முக்கியக் காரணம் அமெரிக்க அரசு புதிதாக நடைமுறைப்படுத்தும் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான இன்பராஸ்டக்சர் மசோதா தான். இந்த மசோதாவில் எலக்ட்ரிக் கார் தொடர்பான முக்கியமான திட்டம் உள்ளது.
5,00,000 சார்ஜிங் ஸ்டேஷன்
இன்பராஸ்டக்சர் மசோதா-வில் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்காக 5,00,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் நாடு முழுவதும் அமைக்கும் திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் சுமார் 7.5 பில்லியன் டாலர் முதலீட்டில் செயல்படுத்தவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ரிவியன்-க்கு வாய்ப்பு
அமெரிக்க அரசின் இத்திட்டம் மூலம் புதிதாக வரும் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்காகத் தனி முதலீடு செய்யத் தேவையில்லை. இதன் மூலம் டெஸ்லா-வை தவிரப் பிர நிறுவனத்தின் கார்களை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இது புதிதாக ஐபிஓ வெளியிட்ட ரிவியன் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications