இதுக்காகவா ரூ.5.31 கோடி அபராதம்.. இது ரொம்ப நல்ல தீர்ப்பா இருக்கே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கெவின் ஹோவர்ட் என்பவர் எப்போது பார்த்தாலும் வேலை வேலை என வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறி, அவரது மனைவி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

ஆனால் மனைவி உண்மையான காரணத்துக்காக, தன்னிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை என்று ராபர்ட் ஹோவர்ட் சந்தேகப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தன்னிடம் விவாகரத்து பெற்ற தனது முன்னாள் மனைவியை கண்கானிக்க, தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடியிருக்கிறார்.

ராபர்ட்டின் சந்தேகம் உண்மைதான்

ராபர்ட்டின் சந்தேகம் உண்மைதான்

இந்த நிலையில் ராபர்ட் சந்தேகப்பட்டது போல் தனது மனைவி உண்மையான காரணத்தை கூறி விவாகரத்து பெற்றிருக்கவில்லை. மாறாக தனது மனைவி அலவலகத்தில் தன்னுடம் பணிபுரியும் மற்றொருவரை காதலிப்பதும், அவருடன் சந்தோஷமாக வாழத் தான் ராபர்ட்டை கழட்டி விட பார்த்திருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் கூறிய இந்த சப்பையான ஒரு பொய்க் காரணத்தையும் கூறியிருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

எப்போது திருமணம்

எப்போது திருமணம்

கடந்த 2005ல் ராபர்ட் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்க்கை 12 வருடங்களாக நன்றாகத் தான் சென்று கொண்டிருந்திருக்கிறது. ஆனால் டிசம்பர் 2016ல் தான் பிரச்சனையே ஆரம்பித்துள்ளது. பின்னர் எப்படியோ ராபர்ட்டை ஏமாற்றி விவாகரத்தும் பெற்றுள்ளார். எனினும் தனது மனைவி தன்னிடம் பொய் சொல்கிறாள் என்று கருதிய ராபர்ட், பின்னரே துப்பறியும் நிபுணர்களை நாடியுள்ளார்.

உண்மை தெரிந்தது
 

உண்மை தெரிந்தது

ராபர்ட் சந்தேகப்பட்டது போலவே தனது மனைவி, அவள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள வேறு ஒருவரை விரும்பியிருக்கிறாள் என்றும், அவனை திருமணம் செய்து கொள்ள தான், ராபர்டிடமிருந்து விவாகாரத்தும் பெற்றுள்ளார். இதை ஆதாராபூர்வமாக ராபர்ட் கூறவே பின்னர் உண்மையையும் ஒப்புக் கொண்டுள்ளார் அவரது மனைவி. இது குறித்து கூறியுள்ள ராபர்ட், 12 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த நம்பிக்கையில் பெரிய இடி விழுந்ததாகவும், மேலும் அவரது திருமண வாழ்க்கை புனிதமானது என்றும், மனைவியிடமிருந்து பிரிந்து செல்வதை என்னால் தாங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா சட்டம்

அமெரிக்கா சட்டம்

அமெரிக்காவின் சட்டத்தின் படி, ஒரு திருமணத்திற்கு இடையூறு விளைவிக்கும் நபருக்கு எதிராக வழக்கு தொடர அந்த நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. இந்த நிலையிலேயே தனது மனைவியின் காதலனின் மீது வழக்கு தொடுத்த ராபர்ட், அவரால் தான் தனது வாழ்க்கை பறிபோய் விட்டது என்றும், இதற்கு தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இவரது வழக்கை விசாரித்த நீதிபதியும், ராபர்டின் நிலையை அறிந்து, அவரின் மனைவியின் காதலன் ராபர்டிற்குகு இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.31 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். இது நல்ல தீர்ப்பா இருக்குல்ல..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Robert Kevin Howard sues wife's lover, wins Rs.5.31cr in judgment

American man Robert Kevin Howard sues wife's lover, won Rs.5.31crore in judgment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X