கலிஃபோர்னியா: செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள், ஹைட்ரோஃபோனிக் பார்மிங் (Hydrophonic farming) என்கிற முறையில் லெட்டியூஸ் (Lettuce), உணவில் பயன்படுத்தும் கெனிவைவ் துளசி (Genevieve Basil), ரெட் வெயிண்டு சாரல் (Red Veined Sorrel) போன்ற காய்கறிகளை பயிரிட்டிருக்கிறதாம்.
ஹைட்ரோஃபோனிக் பார்மிங் (Hydrophonic farming)என்பது, சாதாரணமாக நிலத்தில் பயிரிடப்படும் பயிர்கள் கிடையாது. ஹைட்ரோஃபோனிக் பார்மிங் (Hydrophonic farming)முறையில் பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் கொண்ட நீரை குழாய்களில் ஊற்றி அதில் பயிர்களை வளர்ப்பார்கள்.
அயர்ன் ஆக்ஸ் (Iron Ox) என்கிற கலிஃபோர்னிய ஸ்டார்ட் அப் நிறுவனம், பே ஏரியா ப்ரொடியூஸ் (Bay Area Produce) என்கிற நிறுவனத்தோடு இணைந்து இந்த ரோபோக்களைத் தயாரித்து, விவசாயம் செய்திருக்கிறார்கள்.
ரோபோ
இந்த அயர்ன் ஆக்ஸ் நிறுவனத்தின் ரோபோவில் பல்வேறு தானியங்கிச் சாதனங்களை ஒன்றாக இணைக்கப்பட்டு தயாரித்திருக்கிறார்களாம். அதோடு பயிர்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல சுமார் 500 கிலோ எடையுள்ள போர்டர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். இந்த ரோபோ விவசாயியால் என்ன பயன் எனக் கேட்டால், விவசாய நிலங்களில் மனிதர்கள் காலடி படும் இடங்களில் பயிர்கள் நாசமாகின்றது, எனவே ரோபோ விவசாயி களத்தில் இருக்கும் போது விவசாய நிலங்களில், பயிர் செய்யும் இடங்களில் அதிகம் காலடி படாமல் விளைச்சல் அதிகரிக்கிறதாம்.
ரோபோ கரம்
அதோடு ஒரு ரோபோ கரம் விதைகளை விதைக்க, களை பிடுங்குவது என எல்லா வேலைகளையும் இவைகளே செய்து விடுமாம். இந்த இயந்திரக் கரத்தை இயக்க ‘தி பிரெய்ன்' என்கிற பெயரில் ஒரு கணினியும் பொருத்தி இருக்கிறார்களாம். இந்தக் கணினி தான் ரோபோ விவசாயம் செய்யத் தேவையான எல்லா கட்டளைகளையும் கொடுக்கிறதாம். ஒரு விவசாயி உற்பத்தி செய்வதை விட 30% கூடுதல் விளைச்சலை, இவர்களின் ரோபோ விவசாயி கொடுத்திருக்கிறாராம். இது விளைச்சல் கணக்கு மட்டுமே.
விற்பனை
ஆனால் தற்போது இந்த அயர்ன் ஆக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும், காய்கறிகள், பே ஏரியா ப்ரொடியூஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலேயே விளைய வைத்தவைகளாம். எனவே இனி காய்கறிகளுக்கான சந்தை எங்கு அருகில் இருக்கிறதோ... அந்த இடத்துக்கு அருகிலேயே கூடுமான வரை பயிர் செய்து விளைச்சலை விற்று விடலாம் என்கிறார்கள். எனவே இதனால் பெட்ரோல், டீசல் செலவு மிச்சம். அதனால் சுற்றுச்சூழலில் கலக்கும் மாசு அளவும் குறையும் என பட்டியலிடுகிறார்கள்.
ஏன் இப்போது
சரிங்க ஐயா, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். தற்போது ஏன் இந்த கண்டுபிடிப்புகள் எனக் கேட்டால் "இன்னும் 50 வருடம் கழித்து யோசித்துப் பாருங்கள். மனிதர்கள் வாழவே பூமியின் நிலபரப்புகள் பத்தாது. எனவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வரை ஹைட்ரோஃபோனிக் பார்மிங் (Hydrophonic farming) முறையில் பயிர் செய்ய வேண்டி இருக்கும். அப்போது தான் உலகில் உள்ள விவசாய பொருட்களுக்கான தேவையே பூர்த்தி ஆகும். அதனால் தான் கண்டுபிடித்தோம்" என்கிறார்கள்.
விவசாயி அழிந்தே விடுவான்
இதில் வருத்தப்பட வேண்டிய ஒரே விஷயம் ரோபோக்கள் தயாரிக்கும் காய்கறிகளின் விலை தான். வழக்கம் போல விவசாயிகள் ஒரு கட்டு கீரைக்கு 20 ரூபாய் என நிர்ணயித்தால், இந்த இயந்திர விவசாயி, தன் அனைத்து செலவுகளையும் சொல்கிறது. இத்தனை செலவுகள் கழிந்த பின்னும், மனிதர்கள் கொடுப்பதை விட குறைவாக இயந்திரங்களால் கொடுக்க முடிகிறதாம். இந்த ஒரு விஷயத்தினாலேயே அமெரிக்காவில் இந்த அயர்ன் ஆக்ஸ் திட்டங்கள் வளரும் என நம்புகிறார்கள். மீண்டும் விலை குறைவுக்கு ஆசைப்பட்டு, மனித இனத்தின் பழமையான தொழில் மற்றும் கலையை அப்படியே மறக்க இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications