உலகின் ஆடம்பர கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ரோல்ஸ் ராய்ஸ், கடந்த சில வருடங்களாக டெஸ்லா-வின் வெற்றியை தொடர்ந்து எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் இறங்கியது. இதன் மூலம் சமீபத்தில் ஸ்பெக்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிர்வாகியின் கீழ் இந்நிறுவனம் செலவின குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விரைவில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்க செய்ய உள்ளது ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒவ்வொரு கார்களையும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும் பணக்காரர்களுக்கு உயர்தரத்தில் கஸ்டமைஸ் செய்து அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஆடம்பர பிரிவில் வந்தாலும், இந்நிறுவன கார்களின் செயல்திறனிலும் பெயர்போனது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2023 மே மாதத்தில் பணிநீக்கம் செய்வதாக சண்டே டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அதன் பணியாளர்களில் மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது. இதனால் பணிநீக்கம் இல்லாமல் மே மாதம் ஊழியர்கள் தப்பித்தனர்.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 2500 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்பில் அதிகப்படியான பணிநீக்கம் என்ஜின் தயாரிப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிநீக்கம் மூலம் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து ஊழியர்களை பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றிய நிலையில் என்ஜின் தயாரிப்பு பிரிவில் பணிநீக்கம் நடக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார்கள் பெட்ரோல் கார்களை காட்டிலும் சிறப்பான செயல்திறனையும், அதிகப்படியான டெக் சேவைகளையும் வழங்க கூடியதாக மாறியிருக்கும் வேளையில் இந்த பணிநீக்கம் வருகிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் முழு எலக்ட்ரிக் கார் நிறுவனமாகவும் மாற திட்டமிட்டு உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் Tufan Erginbilgic தலைமையில் வேகமாக வர்த்தகத்திலும், வருவாயிலும் மீண்டு வருகிறது. இவர் கடந்த ஜனவரி மாதம் CEO ஆக பொறுப்பேற்றார், இந்த பதவிக்கு வந்த நாளில் இருந்து பணவீக்க பாதிப்புகளை ஈடுசெய்ய நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறார்.
Rolls Royce Spectre கார் மார்ச் 2024ல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் வேளையில், இந்தியாவில் இந்த காரின் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாயில் துவங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பரமான காரின் ரிவ்யூவ்-யை பலரே ஏற்கனவே செய்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications