5.8 பில்லியன் டாலர் நஷ்டத்தில் ரோல்ஸ் ராய்ஸ்..!
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், லஞ்ச குற்றத்திற்காக அளிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் பிரெக்ஸிட் பிரச்சனையால் 2016ஆம் ஆண்டில் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளது.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், லஞ்ச குற்றத்திற்காக அளிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் பிரெக்ஸிட் பிரச்சனையால் 2016ஆம் ஆண்டில் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்துள்ளது.
ஏற்கனவே நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் அளவுகளை உயர்த்த வேண்டும் எனப் பல சீர்திருத்த பணிகளைச் செய்தும் வரும் இந்நிறுவனம் கடந்த வரும் வெறும் 813 மில்லியன் பவுண்ட் லாபமாகப் பெற்றது.

இத்தகைய சூழ்நிலையில் 2016ஆம் ஆண்டில் அதிக லாபத்தைப் பெறும் என்று சந்தை வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், 4.6 பில்லியன் பவுண்ட் (5.8 பில்லியன் டாலர்) நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகமாகப் பயணிகள் ஜெட், பாதுகாப்பு மற்றும் கடற்படை சார்ந்த வாடிக்கையாளர்களை அதிகளவில் கொண்டுள்ளது. ஆனால் இந்நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்புக்குப் பெயர்போனது.

Click it and Unblock the Notifications