120 வருடங்களாக உலகில் எல்லோரையும் தனது அற்புத கார் தயாரிப்பால் வாய் பிளக்க வைக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2023 ஆம் ஆண்டில் துஃபான் எர்கின்பில்கிச் பொறுப்பேற்ற பிறகு, அவர் மேற்கொண்ட முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் நிறுவனத்தின் பங்கு விலை 500 சதவீதம் அளவிற்கு உயர்ந்ததுள்ளது.
இந்த தடாலடி உயர்வுக்குப் பின்னால் முக்கியமான விஷயம் உள்ளது, அதுதான் பணிநீக்கம். ஆம் துஃபான் எர்கின்பில்கிச் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட பின்பு சுமார் 2,500 ஊழியர்களை, குறிப்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலானோர் மேனேஜர் பதவிகளில் இருந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொடர்பாக ஃபார்ச்சூன் இதழ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த பணிநீக்கம் நிறுவனத்தின் லாப இலக்குகளை இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே எட்ட வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது.
2500 ஊழியர்கள் பணிநீக்கம் என்பது கடுமையான நடவடிக்கையாக இருக்கும் வேளையில், எர்கின்பில்கிச் இந்த பணிநீக்கம் நிறுவனத்திற்கு மிகவும் அவசியமானது என்றும், இரக்கமற்றதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பில் மட்டும் அல்லாமல் விமானங்களுக்கான இன்ஜின் தயாரிப்பிலும் முன்னோடியாக உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் 2020 ஆம் ஆண்டில் விமான சேவை முடங்கியது, கார் விற்பனையும் பெரிய அளவில் குறைந்தது அப்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன பங்குகள் வெறும் 80 பிரிட்டிஷ் பென்னி ஸ்டெர்லிங்-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்து ஒரு பங்கு 800 பென்னி ஸ்டெர்லிங் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதுவும் கடந்த 2 மாத காலத்தில் 600 பவுண்டில் இருந்து 800 பென்னி ஸ்டெர்லிங் வரையில் உயர்ந்து அதன் வரலாற்று உச்ச அளவான 818 பென்னி ஸ்டெர்லிங் அளவீட்டை தொட்டு உள்ளது. இந்த தடாலடி உயர்வுக்கு 2023 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட துஃபான் எர்கின்பில்கிச் தலைமையிலான நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் தான்.
ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு துஃபான் எர்கின்பில்கிச் அளித்த பேட்டியில், 42,000 ஊழியர்களைக் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஆபத்தான நிதி நிலைமையை எனக்கு வெளிப்படையாகக் காட்டியது. இதைச் சரி செய்யவும், நிறுவனத்தில் புதுமையைப் புகுத்துவதும் தான் எங்கள் நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications