Ruby Roman Grapes: ஒரு கொத்து திராட்சைக்கு ரூ. 7.5 லட்சமா..? உலக சாதனை படைத்த திராட்சை பழம்..!

இசிகாவா, ஜப்பான்: இந்த திராட்சைக்கு பெயர் Ruby Roman Grapes. இதற்கு இன்னொரு பெயர் டேபிள் கிரேப் என்கிறார்கள்.

ஏனென்றால், இந்த Ruby roman Grapes-ன் சைஸ், எலுமிச்சை பழத்தின் சைஸுக்கு இருக்குமாம். டொயோட்டா-வின் தலைமையகமான ஜப்பானின், இசிகோவா மாவட்டத்தில் தான் இந்த ரக திராட்சைகள் கிடைக்கின்றன.

இந்த Ruby roman Grapes ரக திராட்சைகள் உலக சந்தைகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வரத் தொடங்கியது.

சராசரி விலை

சராசரி விலை

Ruby roman Grapes-ல் ஒரு கொத்தில் சராசரியாக 25 பழங்கள் இருக்கும். 25 பழங்கள் கொண்ட ஒரு கொத்தின் சராசரி விலை இந்திய மதிப்பில் சுமார் 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டன. பெட்ரோல் விற்கின்ற விலைக்கு இவ்வளவு விலை எல்லாம் கொடுத்து நிறைய பேர் வாங்க இயலாது என்பதால், இசிகாவா விவசாயிகளே ஐந்து பழங்களை ஒரு கொத்தாக பிரித்து ஒரு கொத்துக்கு சுமார் 13.25 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ 950-க்கு) விற்கிறார்களாம்.

2019 ஏலம்

2019 ஏலம்

இந்த 2019 Ruby roman Grapes சீசனுக்கான ஏலம், கடந்த செவ்வாய்க்கிழமை (09 ஜூலை 2019) அன்று, ஜப்பானின் Kanazawa என்கிற மொத்த விலை அங்காடியில் நடந்திருக்கிறது. Ruby roman Grapes ரகத்தில் ஒரு கொத்து திராட்சை சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு (1.2 மில்லியன் ஜப்பானிய யென்) ஏலம் போய் இருக்கிறதாம். இந்த Ruby roman Grapes-ன் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போனது இந்த முறை தானாம்.

யார் எடுத்திருக்கிறார்கள்

யார் எடுத்திருக்கிறார்கள்

இவ்வளவு விலை கொடுத்து ஏலம் எடுத்தது Hyakurakuso என்கிற ஜப்பானிய ஹோட்டல் நிறுவனம் தானாம். அப்படி என்ன இந்த பழத்தில் இருக்கும்..? விளம்பரங்களில் காட்டுவது போல ஒரு கடி கடித்தால் திராட்சை ரசமாக ஒழுகும், தேன் சுவை தித்திக்கும், அமிலத்தன்மை மிக மிகக் குறைவு, ஒரே ஒரு பழத்தின் எடை மட்டும் சுமார் 20 கிராமுக்கு மேல் இருக்கும்... என வர்ணிக்கிறார்கள் விவசாயிகள்.

தரம் குறைவு

தரம் குறைவு

ஜப்பானில் இந்த வருடம் கொஞ்சம் கூடுதல் வெப்பம் நிலவியதால், இந்த வருட ரூபி ரோமன் திராட்சையின் தரம் குறைந்திருப்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியும் இந்த வருடம் சுமார் 26,000 Ruby roman Grapes கொத்துக்களை வரும் செப்டம்பர் 2019-க்குள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருப்பதாக இசிகாவா கூட்டுறவு அமைப்பு கணித்திருக்கிறது. அப்படி என்றால் இந்த Ruby roman Grapes-ல் தயாரிக்கப்படும் வொயினுக்கு என்ன விலை இருக்கும் என்று நீங்கள் கூட்டிக் கழித்துப் பாருங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+