எங்களுக்கேவா.. மீண்டும் எண்ணெயை ஆயுதமாக்கும் ரஷ்யா.. அச்சத்தில் உலக நாடுகள்.. இனி விலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி மாதம் முதல் போர் தாக்கம் இருந்து வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. விலை உச்ச வரம்பு 60 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா அதற்கு எதிர்ப்பினை காட்டியது.

ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய் விலை 5,00,000 முதல் 7,00,000 பேரல்களாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

இது அதன் உற்பத்தியில் 5 - 7% குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி குறைப்பானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையில் தொடரும் ஏற்றம்.. சாமானியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? தங்கம் விலையில் தொடரும் ஏற்றம்.. சாமானியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்தான ஆவணத்திலும் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.

ரஷ்யாவின் இந்த முடிவு வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 2.7% அதிகரித்து 83.87 டாலர்களாக அதிகரித்து காணப்பட்டது. இதே வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலையானது 2.8% அதிகரித்து, 79.69 டாலர்களாக உச்சம் தொட்டது.

எப்படியேனும் முடக்கிவிட வேண்டும்

எப்படியேனும் முடக்கிவிட வேண்டும்

ரஷ்யாவினை எப்படியேனும் முடக்கிவிட வேண்டும் என கூறிவரும் மேற்கத்திய நாடுகள் மத்தியில், இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஒரு கட்டத்தில் ரஷ்ய எண்ணெயை யாரும் வாங்க கூடாது என்று கூறப்பட்ட நிலையில், மறுபுறம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் சலுகை விலையில் எண்ணெய் வாங்கின. இதற்கிடையில் ரஷ்யா எப்போதும் போல இல்லாவிட்டாலும் ஒரளவுக்கு விற்பனையை செய்து வந்தது.

ஏமாற்றத்தில் மேற்கத்திய நாடுகள்

ஏமாற்றத்தில் மேற்கத்திய நாடுகள்

ஆனால் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவின் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். அதுவும் குறைந்த விலையில் பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டு, அதற்கு ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பானது பயன்படலாம் என எதிர்பார்த்தன. ஆனால் ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என மேற்கத்திய நாடுகள் நினைத்திருக்காது எனலாம்.

உற்பத்தி குறைப்பு

உற்பத்தி குறைப்பு

ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பால் பாதிக்கப்படுவதற்கு, அதற்கு உற்பத்தியினை குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு ரஷ்யா வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என மேற்கத்திய நாடுகள் எதிர்பார்க்காது. ரஷ்யாவின் இந்த முடிவால் மேற்கத்திய நாடுகள் மட்டும் அல்ல, சர்வதேச நாடுகள் அனைத்துமே பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளுக்கு தான் பாதிப்பு

சர்வதேச நாடுகளுக்கு தான் பாதிப்பு

ஏனெனில் இந்த முடிவுக்கு வந்திருப்பதால் தகவல்கள் வெளியான நிலையிலேயே, கச்சா எண்ணெய் விலையானது உச்சம் எட்டியது. இந்த அறிவிப்பானது நடைமுறைக்கு வந்தால், பழையபடி கச்சா எண்ணெய் 100 டாலர்களுக்கு மேலாக ஏற்றம் காணலாம். இதனால் சர்வதேச நாடுகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் எனலாம்.

இப்படி நடக்குமா?

இப்படி நடக்குமா?

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு இடையே எப்படியேனும், இப்பிரச்சனையை நிறுத்த வேண்டும் என்று கூறி வரும் நிலையில், இத்தகைய முடிவுகள் வந்தாலும், இன்று வரையிலும் ரஷ்யா சில நாடுகளுக்கு சப்ளை செய்து கொண்டு தான் உள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரமும் ஒரளவுக்கு வளர்ச்சி கண்டு கொண்டு தான் உள்ளது. ரஷ்யாவினை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம் வளர்ச்சி காண விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்து வருகின்றன. ஆனால் இவர்களுக்கு எல்லாம் அல்வா கொடுக்கும் விதமாக ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுக்கும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia alert to Cut crude Oil Output in Response to Sanctions

With the G7 price ceiling set at $60, Russia is reportedly planning to cut crude oil prices by 5,00,000 to 7,00,000 barrels per day in protest.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X