ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை வீழ்ச்சியடைய வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான நாடான ரஷ்யா தற்போது, பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. தங்களது வணிக வளர்ச்சியானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
மோசமான வளர்ச்சி
இதற்கிடையில் தான் ரஷ்ய நிறுவனங்கள் தங்களது வணிக வளர்ச்சியினை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. 1991ம் ஆண்டிற்கு பிறகு சோவியத் யூனியனின் வளர்ச்சியானது, மிக மோசமான வளர்ச்சியினை எதிர்கொண்டுள்ளது. இதனை மீட்டெடுக்கும் விதமாக ரஷ்யா நடவடிக்கையினை எடுக்க ஆரம்பித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வாக்களியுங்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் நீண்டகாலமாக ஆயுத சப்ளை செய்யும் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. உக்ரைன் - ரஷ்ய நடவடிக்கையில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவினை மேற்கத்திய நட்பு நாடுகள் இந்தியாவை ஊக்குவித்துள்ளன.
ரஷ்யா - இந்தியாவின் வணிக உறவு
ஆனால் இந்தியாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 1 பில்லியன் டாலர்களை தொட்டுள்ளது. தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தெளிவான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் விரிவாக்கம்
ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்திய முதலீட்டை மேலும் ஈர்ப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ரஷ்யா நிறுவனங்களின் விற்பனை நெட்வொர்க்குகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறோம் ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்ஸாண்டர் நோவாக், இந்திய பெட்ரோலியம் மற்றூம் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கூறியுள்ளார்.
ஏற்றுமதியை சீர்குலைக்கும்
அமெரிக்கா முன்னதாக நடப்பு வாரத் தொடக்கத்தில் எண்ணெய் இறக்குமதியினை தடை செய்துள்ளது. இதே பிரிட்டன் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடை செய்யும் என்றும் கூறியுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி சந்தையை மேலும் சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா முன்னணியில் உள்ளது.
ரஷ்ய நிறுவனங்களில் முதலீடு
இந்தியா அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே, ரஷ்ய நிறுவனங்கள் சிலவற்றில் பங்குகளை வைத்துள்ளன. அதே நேரம் ரோஸ் நெப்ட் உள்ளிட்ட ரஷ்ய நிறுவனங்கள் இந்திய சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா எனர்ஜியில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளன. சில இந்திய நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே எண்ணெய் வாங்கிக் கொண்டும் உள்ளன.
More From GoodReturns

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications