உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யா தனது கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கு மாற்றுச் சந்தைகளைக் கண்டறியும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. இந்த போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தது. இந்த தடையின் வாயிலாக ரஷ்யா தனது வழக்கமான ஐரோப்பிய வர்த்தக தொடர்பை மொத்தமாக இழந்துவிட்டது.
ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என திட்டத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யத் துவங்கியது, இது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ரஷ்யாவின் செயல்பாடுகளால் ஐரோப்பாவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் டீசல் வர்த்தகம் பெரும் சவால்களை எதிர்கொண்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியச் சந்தையின் பக்கம் திருப்பிவிட்டது. இதன் வாயிலாகப் போருக்கு முன்பு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 1% ஆக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 42% ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் அதிகப்படியான சப்ளை காரணமாக இந்தியாவுக்கு தொன்றுதொட்டு சப்ளை செய்து வந்த ஈராக், சவுதி அரேபியா, UAE மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடனான வர்த்தகம் பாதித்தது.
இந்த நிலையில் தான் ரஷ்யா தனது டீசல் சப்ளையை தென் அமெரிக்க நாடுகளுக்கு அதிகரித்தது. இது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படித் தெரியுமா..?
இந்தியத் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் ரஷ்யா கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் டீசலின் பெரும் பகுதி ஐரோப்பா-வுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அமெரிக்கக் கடலோர விநியோக நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டது. இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுகொண்டு இருந்தது.
ஆனால் சமீபத்தில் ரஷ்ய தனது டீசல் தயாரிப்பைத் தென் அமெரிக்காவிற்கு அதிகரித்த காரணத்தால், இப்பகுதியில் வர்த்தகம் செய்யும் அமெரிக்கா கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டது. இதன் காரணமாக அமெரிக்கா தனது டீசல் உற்பத்தியை நட்பு நாடான ஐரோப்பாவிற்குத் திருப்பியது. அதன் விளைவாக இந்திய ஏற்றுமதி மறைமுகமாகப் பாதித்துள்ளது.
ஐரோப்பாவுக்கான இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 2024 ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் ஒரு நாளைக்கு 150 ஆயிரம் பேரல் (TBD) வரையில், கடந்த ஆண்டின் அளவை காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் பொருளாதார மந்தநிலை காரணமாக எரிபொருள் தேவை குறைந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களைக் கூடுதலாகப் பாதித்தது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் டீசல் ஏற்றுமதி 6% குறைந்து 490 TBD ஆக உள்ளது.
இந்தியாவுக்குக் கூடுதல் பிரச்சனையாகச் செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் ஐரோப்பாவிற்கு இந்தியாவின் டீசல் ஏற்றுமதிக்கு மற்றொரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications