உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்தன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்திக் கொண்டன.
இந்த நெருக்கடிகள் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் சிக்கலை சந்தித்தது. ஆனால் இந்த சூழலை சரியாக பயன்படுத்தி கொண்டு பெரிய அளவில் கல்லா கட்டியுள்ளது ரஷ்யா.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக அழுத்தம் கொடுத்தன, இதில் முக்கியமானது பொருளாதார தடை.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்த பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு தொழிலை கைவிட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகின. இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக ரஷ்ய அரசு கூடுதல் வரிகளை விதித்தது.
இவ்வாறு கூடுதல் வரி விதித்ததன் மூலம் 2024 ஆம் ஆண்டு 385 மில்லியன் டாலர்களை ரஷ்யா பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. தங்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் நிறுவனங்களுக்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை ரஷ்ய அரசு விதித்தது.
அரசு முகமையிடமிருந்து உரிய ஒப்புதலை பெற வேண்டும் ,தங்கள் நிறுவனத்திலிருந்து விற்பனை செய்யும் பொருட்கள் அல்லது சொத்துக்களை 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை ரஷ்ய அரசு வெளியிட்டது. அமெரிக்கா இதனை எக்ஸிட் டாக்ஸ் என அழைக்கிறது.
இந்த எக்ஸிட் டாக்ஸ் மூலம் மட்டும் ரஷ்யாவின் நிதிநிலைக்கு 10 விழுக்காடு நிதி வந்துள்ளது தெரியவந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையில் இருந்து வெளியேற உதவும் பரிவர்த்தனைகளுக்காக ரஷ்ய வங்கிகள் 5.4 பில்லியன் டாலர்களை கடனாக கொடுத்துள்ளது என ரஷ்யாவின் மதிய வங்கி அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் பொருளாதார தடைகளை சந்திக்கும் போதிலும் மாற்று வழிகளை அதனை சரி செய்யும் பணிகளை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
டாலரை விடுத்து உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்வது, குறிப்பாக கச்சா எண்ணெய் விற்பனையில் தள்ளுபடி அறிவிப்பது போன்ற வழிமுறைகளை கையாண்டு ரஷ்யா தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்தி கொண்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications