அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி.. நீங்க மட்டும் தான் தடை போடுவீங்களா..!!

ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து உக்ரைன்-க்கு ஆதரவாக இருக்கும் ஜி7 நாடுகள் ரஷ்ய நிறுவனங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை கட்டம் கட்டி பலர் மீது தடைவிதித்தனர்.

இந்த உத்தரவு மூலம் பட்டியலில் இருப்போர் தடை விதித்த நாடுகளுக்கு செல்லவோ, முதலீடு செய்யவோ, வர்த்தகம் செய்யவோ முடியாது. தடையை மீறி அந்த நாடுகளுக்கு சென்றால் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி அமெரிக்க அரசு விளாடிமிர் புடின் உட்பட பல நூறு பேர் மீது தடை விதித்துள்ளது.

அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி.. நீங்க மட்டும் தான் தடை போடுவீங்களா..!!

இந்த நிலையில் ரஷ்ய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்ட சமீபத்திய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமார் 500 அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை பட்டியலில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஒருவர் ஆவார்.

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் Evan Gershkovich. இவரை அமெரிக்க தூதர் சந்திக்க அமெரிக்கா கோரிக்கை வைத்த நிலையில் ரஷ்ய அரசு மறுத்துவிட்டதாகவும் நேற்றைய தடை அறிவிப்பில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோ ஐக்கிய நாடுகளுக்கான மீடியா பயணத்திற்கு விசா வழங்க கடந்த மாதம் அமெரிக்கா மறுத்ததால் தற்போது அமெரிக்காவின் கோரிக்கை மறுக்கப்பட்டு உள்ளது என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அமெரிக்க அரசு 300 பேரை டார்கெட் ஆக கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த நிலையில் மாலையில் பராக் ஒபாமா உடன் சுமார் 500 பேரை தடை பட்டியலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் சேர்த்து அதிரடி காட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை காட்டும் விதமாக அமெரிக்கா இதை செய்தது.

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் ஜி7 நாடுகள் மே 19 ஆம் தேதி துவங்கிய கூட்டத்தில் ரஷ்யா மீது கூடுதலான தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது. ஜி7 நாடுகள் பல்வேறு தடைகளை விதிக்கப்பட்ட பின்பும் தற்போது ரஷ்யா தடை உத்தரவுகளை மீறாத வகையில் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய தடைகளை விதித்து ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக ஒடுக்க திட்டமிட்டு வருகிறது ஜி7 நாடுகள்.

அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி.. நீங்க மட்டும் தான் தடை போடுவீங்களா..!!

ஜப்பான் நாட்டில் நடக்கும் இந்த G7 கூட்டத்திற்கு இந்தியா-வை விருந்தனர் நாடாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் பிரதமர் மோடியும் ஜப்பான் சென்றுள்ளார். இன்று ஜப்பான் அதிபருடன் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மே 19 முதல் மே 21 வரையில் நடக்கும் G7 கூட்டத்தில் ரஷ்யாவின் எனர்ஜி மற்றும் ஏற்றுமதி பிரிவை குறிவைத்து புதிய தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்புகளும், விபரங்களும் விரைவில் வெளியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+