ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து இரு நாடுகளில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும், நிர்வாகமும் தொடர்ந்து பீதியிலேயே உள்ளது. உயிரை காப்பாற்றுவதா, வர்த்தகத்தை காப்பாற்றுவதா என குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது, இதற்கிடையில் அமெரிக்கா , பிரிட்டன், ஐரோப்பா என உலக நாடுகள் அதிகளவிலான வர்த்தக தடைகளையும், நிதி பரிமாற்ற தடைகளையும் விதித்தது.
இதனால் ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகம் செய்தாலும் அதன் உற்பத்தி, வருமானத்தை தாய் நாட்டிற்கோ, பிற நாட்டிற்கோ கொண்டு செல்ல முடியாது. இதனால் ரஷ்யாவிட்டு வெளியேறுவது தவிர வேறு வழியே இல்லாமல் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இருந்தது. போரின் துவக்க காலத்திலேயே பல அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியது. இதில் முக்கியமாக கூகுள், மெட்டா, மெக்டொனால்டு, லிவைஸ், போன்ற பல நிறுவனங்கள் வெளியேறியது.

கடந்த சில நாட்களாக பிற நாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்ய அரசு தரப்பில் இருந்து நேரடியாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் காரணத்தால், தற்போது தென் கொரிய நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் ரஷ்யாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை ஹூண்டாய், ரஷ்யாவின் Kazakh என்னும் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
தொழிற்சாலை விற்பனைக்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், இதற்காக ரஷ்ய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக ஹூண்டாய் தென் கொரிய செய்தி சேனலுக்கு தெரிவித்துள்ளது. ஹூண்டாய் கடந்த ஆண்டே அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது, ஆனால் போர் முடிந்து விடும், அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என திட்டத்தில் ஹுண்டாய் ரஷ்யாவை விட்டு வெளியேறாமல் இருந்தது.
இதை விட முக்கியமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரு வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துக்களை அரசு கைப்பற்ற உத்தரவிட்டு உள்ளார். இது அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. போர் துவங்கிய காலத்தில் ரஷ்ய அரசு, தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சொத்துக்களை உலக நாடுகள் கைப்பற்றிய நிலையில் இதற்கு ரஷ்ய அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த Uniper SE மற்றும் பின்லாந்து நாட்டை சேர்ந்த Fortum Oyj ஆகிய நிறுவனங்களின் ரஷ்ய சொத்துக்கள், நிறுவனங்கள், உற்பத்தி தளங்கள் என அனைத்தும் கைப்பற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஒருப்பக்கம் உக்ரைன் நாட்டுடன் ரஷ்ய ஆதரவாளரான சீனா போர்-ஐ நிறுத்த முதல் முறையாக பேச்சுவார்த்தை துவங்கியுள்ள இந்த நேரத்தில் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது. போர்-க்கு முன்பு ரஷ்யாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் பிராண்டுகளில் Renault, Hyundai மற்றும் Kia ஆகியவை இருந்தது, போருக்கு பின்பு சீன பிராண்டுகள் இந்த இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications