மோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.!

By Gowthaman Mj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    ஒரு நாடு எப்போது ஒரு சார்பாகத் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். உதாரணமாக இஸ்ரேலை எடுத்துக் கொள்ளுங்கள். இனி அப்படி ஒரு நாடு இல்லை என்கிற வரை அமெரிக்காவின் அடிபொடி தான். ஈரானை எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேல் அமெரிக்கா என்றால் வாயெல்லம் கசக்கும் அவர்களுக்கு.

    ஒரு நாடு ஒரு நண்பன்

    இன்றைய தேதிக்கு ஒரு நாடு, ஒன்று அமெரிக்கா உடன் நட்பாக இருக்க வேண்டும் அல்லது ரஷ்யாவிடம் இருக்க வேண்டும். ரஷ்யாவுக்கு இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பை நேரு காலத்தில் இருந்து பார்க்க முடிகிறது. நம் இந்தியா கடந்த 15 ஆண்டுகளாக கொஞ்சம் வெயிட்டான மார்க்கெட்டாக உருவாகி இருப்பதால் இன்று அமெரிக்காவே, இந்தியா மீது ஆர்வம் காட்டி வருகிறது.

    பழைய கதை

    இந்திரா காந்தி, 1960-களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து இந்தியர்களுக்கு தேவையான உணவு தானியங்களை கொண்டு வர ஒப்ப்ந்தம் போட்டிருந்தார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். வியட்நாம் போர் பற்றி ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து கண்டனம் தெரிவித்ததற்காக அன்றைய அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தானியக் கப்பலை அனுப்ப மறுதுது விட்டார். அந்த ஒப்பந்தத்தின் பெயர் பிஎல் 480. இந்த பிஎல் 480 கூட ரத்தான விதம் இருநாட்டுக்கும் பெரிய கசப்பு உணர்வையே கொடுத்தது. மீண்டும் 1971 இந்தோ பாக் போரின் போதும் அமெரிக்காவுக்கு இந்தியாவால் எந்த பயணும் இல்லை என்று கைவிடப்பட்டது. இப்படி தனக்கு பைசா பிரயோஜனம் இல்லாத நேரங்களில் கழட்டி விடுவது அமெரிக்கன் ஸ்டைல். தேவை என்றால் "உனக்கு நான் இருக்கேன் செல்லம்" என ஒட்டிக்கொள்ளும்

    ரஷ்யா நிலைப்பாடு

    மேலே சொன்ன அனைத்து காலகட்டங்களிலும் ரஷ்யா தொடர்ந்து இந்தியாவை ஆதரித்து வந்தது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும், ரஷ்யா தன் ஆதரவுக் கரத்தை நீட்டிக் கொண்டே இருந்தது. ஆனால் ஒரே ஒரு பிரச்னை. ரஷ்யா, இந்தியாவின் போட்டியாளரான சீனாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறது. சீனாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பது ஏதோ சில வருஷங்கள் முந்தைய கதை அல்ல. சீனா என்று ஒரு கம்யூனிஸ நாடு உருவானதில் இருந்தே ரஷ்யா சீனாவுக்கு உதவி வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, ரஷ்யா தான் சுதந்திர இந்தியா காலத்தில் இருந்தே மிக பெரிய ஆயுத சப்ளையர். ரஷ்யாவின் தலை சிறந்த ஆயுதங்கள், விமானங்கள் கூட இந்தியாவுக்கு விற்று இருக்கிறார்கள். இப்படி எந்த நாட்டு ராணுவமும் தன் சிறந்த ஆயுதங்களை விற்க அனுமதிக்காது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

    அமெரிக்க எச்சரிக்கை

    அமெரிக்கா, இந்தியா முழுவதும் தன் வர்த்தக கொடி நாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் போது, போயும் போயும் தன் எதிரியான ரஷ்யாவிடம், இந்தியா தன் உறவை வலுப்படுத்துவதை அமெரிக்காவில் ஜீரணிக்க முடியவில்லை. என்ன நடந்தாலும் ரஷ்யாவின் நட்பை இந்தியா முறித்துக் கொள்ளாது என்பதை இந்தியா தெளிவாகச் சொல்லி விட்டது. இன்று இந்தியாவும் ரஷ்யாவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருந்தாலும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் தான் இங்கு பிரச்னையே. அதிலும் குறிப்பாக எஸ்-400 ரக ராக்கெட் மிசைல்கள். S-400 Rocket Missile பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்குங்கள். இந்த ராக்கெட்டின் சாகசங்கள், இதனால் அதிகரிக்கும் இந்திய பாதுகாப்பு போன்றவைகளை கருத்தில் கொண்டு அமெரிக்கா கொக்கரிக்கிறது. இந்தியா தானாகவே பாதுகாப்பு ஆகிவிட்டால் அமெரிக்க ஆயுதங்களை யாரிடம் விற்பது. இந்த ஆயுதம் விற்கும் காசு கூட மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடாதாம். அந்த அளவுக்கு லாப வெறி அமெரிக்க கண்களைமறைக்கிறது தவிர ரஷ்யத் துவேசம் வேறு.

    CAATSA

    Countering America's Adversaries through Sanctions Act (CAATSA) சட்டப்படி இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க இருக்கிறது. இந்த சட்டமே கேலிக்கூத்தானது தான். இந்த சட்டத்தின் பெயரை அப்படியே மொழிபெயர்ப்பு செய்து பாருங்களேன். "அமெரிக்க எதிரிகளாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை சட்டத்தின் படி தடை விதிப்பது"என்று தான் பொருள் படுகிறது. அது தான் உண்மையும் கூட.

    அமெரிக்க சுபாவம்

    முதல் உலகப் போர் ஆகட்டும், இரண்டாவது உலகப் போர் ஆகட்டும், ஆப்கன் போர் ஆகட்டும், வளைகுடா போர் ஆகட்டும் எல்லா யுத்தங்களுக்கும் இவர்களே சிஐஏ-க்கள் மூலம் ஆயுதம் விற்பார்கள். இவர்களே அமைதியும் பேசப் போவார்கள். அந்த அளவுக்கு தன் பிசினஸ் லாபத்தை வெறித் தனமாக பார்க்கும் நாடு அமெரிக்கா. இப்போது அமெரிக்காவே "தம்பி நான் உன்னோடு பிசினஸ் பேசனும்" என்று சொல்லியும், இந்தியா அவர்களை மதிக்காமல் தன் பரம எதிரியான ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் சும்மா இருப்பார்களா? இந்த சட்டப்படி பழைய டீல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் படி பொருட்களை வாங்கலாம் விற்கலாம். புதிய டீல்கள் எதுவும் கையெழுத்து இடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

    அமெரிக்க சந்திப்பு

    ஜேம்ஸ் மேட்டிஸ் மற்ம் மைக் பாம்பியோ இருவரும் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிர்மலா சீதாராமன் உடன் பேசி முடித்துவிட்டு சென்றது நினைவிருக்கலாம். அந்த கூட்டத்திலும் "இந்த பாருங்க நீங்க ரஷ்யா கிட்ட S400 வாங்குனா நாங்க தடை விதிப்போம்"-ன்னு நேரடியாகச் சொல்லிட்டுத் தான் போனார்கள்.

    பாதுகாப்பு ஆலோசகருடன் பயமுறுத்தல்

    இந்த பொருளாதார தடை சம்பந்தமா இரண்டு அமைச்சர்கள பார்த்துப் பேசியது போராமல் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பிரச்னையின் வீரியத்தை விளக்கி பயமுறுத்தி விட்டே சென்றார்கள்.

    நமக்கு எதுக்கு அமெரிக்கா

    மோடிஜியின் மேட் இன் இந்தியா திட்டம், 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் திட்டம் போன்றவைகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. பல அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் வந்து தொழில் தொடங்க அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தைகள் மீது ஆர்வமும் இருக்கிறது. இப்பொது இந்த ஒரு தடை வரும் ஆனால், எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் இந்தியாவில் வந்து தொழில் தொடங்காது.

    பொருளாதாரத் தடை - ஐடி

    குறிப்பாக ஐடி துறையும், துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியப் பொருளாதாரத்தில் ஐடி துறை பங்களிப்பு, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 7 - 8 சதவிகிதம். முதல் வேலையாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஐடி மற்றும் ஐடி தொழில் சார்ந்த இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றப் படுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஐடி அவுட் சோர்ஸிங்குகள் ட்ரம்பின் திட்டப்படி அமெரிக்க நிறுவனங்களுக்கே கொடுக்கப்படும்

    ஏற்றுமதிகள்

    ஆடைகள், விவசாய உணவுகள், ரசாயனங்கள், பாய்லர்கள், விலை உயர்ந்த கற்கள், எலெக்ட்ரிகல் சாதனங்கள், பேருந்துகள், காலணிகள், இரும்பு மற்றும் அதனைச் ஆர்ந்த பொருட்கள், லெதர் பொருட்கள்,மருந்துகள் என்று 48 பில்லியன் டாலருக்கு ஏகப்பட்ட ஏற்றுமதிகள் செய்திருக்கிறோம் .

    இறக்குமதிகள்

    விமான உதிரி பாகங்கள், கப்பல்கள், பொம்மைகள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மரச் சாமான்கள், பஞ்சு, ரசாயனங்கள், செராமிக் என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. இதன் மதிப்பு 25 பில்லியன் டாலர். இதை எல்லாம் தடை செய்தால் இந்தியாவின் தொழில் துறை என்ன ஆவது, எத்தனை தொழிற்சாலைகள் அமெரிக்க ரசாயனங்களை நம்பி இருக்கின்றன. எத்தனை காட்டன் மில்கள் அமெரிக்க பஞ்சுகளை நம்பி இருக்கின்றன என்று நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் தொழில் செய்பவர்களுக்குத் தெரியும்.

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    russia inked a 5.4 billion dollar deal to supply S400 rocket. what america can do with in its limit

    russia inked a 5.4 billion dollar deal to supply S400 rocket. what america can do with in its limit
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more