ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் 2022ல் துவங்கியது முதல், எப்போதுமில்லாத வகையில் ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் மீது மாபெரும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் சுமார் 27 பேர் மரணம் அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் அப்பார்ட்மென்ட் முதல் அரசு கட்டிடங்கள் வரையில் தகர்க்கப்பட்டு உள்ளது.
புதன்கிழமை இரவு துவங்கிய இந்த மோசமான அட்டாக், வியாழக்கிழமையும் தொடர்ந்தது. கடந்த 4 வருட போரில், இதுதான் மிகப்பெரிய அட்டாக் என்று உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் இதற்குச் சரியான பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.

உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy டப்ளின் பயனத்தில் இருந்த நிலையில், ரஷ்யா தாக்குதல் நடத்தப்போவதாக ரகசிய தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு தலைநகர் கீவ்-க்கு புறப்பட்டார். எதிர்பார்த்த படியே ரஷ்யா மாபெரும் தாக்குதலை நடத்தியதுள்ளது.
உக்ரைன் ஏர் போர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா இந்த தாக்குதலில் சுமார் 496 டிரோன், 74 ஏவுகணை கொண்டு தாக்கியுள்ளது. இதில் அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு 476 டிரோன் மற்றும் 48 ஏவுகணைகளை இடம் மறித்து தகர்த்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ரெட் கிராஸ் கிளையின் கிடங்கு முழுவதுமாக பாதிக்கப்பட்டு 2 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் வீண் ஆனது.
ரஷ்யா ஏன் தாக்கியது..
உக்ரைன் சமீபத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் ரஷ்யாவின் ராணுவ தளங்கள் மற்றும் எரிபொருள் தளம் மீது தாக்கியது. இதில் பெரிய அளவிலான எரிபொருள் தளத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. இதனால் ரஷ்யாவின் சில பகுதிகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த மாபெரும் ட்ரோன் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர்
2022 முதல் நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரையில் 4.5 லட்சம் பேரை இழந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதுகிட்டத்தட்ட ரஷ்ய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாகும்.
இதுவே உக்ரைன் நாட்டில் 1.5 லட்சம் பேர மரணம் அடைந்துள்ளனர், 6.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக CSIS அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications