மத்திய கிழக்கு நாடுகளில் இப்போதுதான் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் போர் நிறுத்தத்தின் மூலம் அமைதிக்கு வந்திருக்கிறது. அந்த பதற்றம் தணிந்த சில நாட்களிலேயே உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது.
கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதல் நீடிக்கிறது. உக்ரைனின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என கூறி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது அதன் பின்னர் மேற்கு நாடுகளின் ஆதரவோடு உக்ரைனும் தாக்குதலை தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் ஆன போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வராமல் இருக்கிறது.

இந்த சூழலில் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது மிகப்பெரிய அளவிலான ஒரு தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யா 537 வான்வெளி ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது. உக்ரைன் நாட்டு அதிகாரிகளும் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கி மூன்று ஆண்டு காலம் முடிந்திருக்கும் நிலையில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய தாக்குதலாக ரஷ்யாவின் இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது . இதில் 269 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் 226 டிரோன்கள் தங்களை தாக்கின என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உக்ரைன் விமானப்படை விமானி ஒருவர் உயிரிழந்திருக்கிறார் . போர் நடந்து வரும் இடத்திலிருந்து மிக தொலைவில் இருக்கக்கூடிய மேற்கு உக்ரைன் பகுதி வரை ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவிக்கிறது.
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் வீடுகள் மற்றும் பல்வேறு உள்கட்ட அமைப்புகள் சேதம் அடைந்துள்ளன என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா இந்த தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள எங்களுக்கு ராணுவ ரீதியான உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ரஷ்யா தன்னுடைய தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திருக்கிறது. எனவே உங்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது என அவர் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த அடுத்த நாளிலேயே ரஷ்யா இந்த மிகப்பெரிய ஒரு தாக்குதலை தொடுத்து இருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் ரஷ்யா 116 ஏவுகணைகளை எங்கள் மீது வீசி இருக்கிறது ,1770 டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி இருக்கிறது, 1100 வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது என அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications