உக்ரைன் தலைநகரான கீவ் நகரம் இன்று காலையில் ரஷ்யாவின் பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் பலத்த குண்டு வெடிப்பு ஒலியுடன் மக்கள் எழுந்தனர். உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிகிறது.
உக்ரைன் ராணுவம், டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் ரஷ்யா குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தது. ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையும் டெலிகிராம் தளத்தில் பரவிய பல்வேறு தகவல் அடிப்படையில் இதை உறுதி செய்துள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்த விவரங்களை திட்டமிட்டும் சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருந்தார், இது இரு நாடுகள் மத்தியிலான தாக்குதலை அதிகரித்துள்ளது.
ஜெலன்ஸ்கி டிரம்புடன் ஃப்ளோரிடாவில் டிசம்பர் 28 அல்லது 29ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீவ் நகரில் தாக்குதல் தொடங்கியதும் வான் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது, இதை தொடர்ந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். டெலிகிராம் சேனல்களில் குண்டு வெடிப்புகள் குறித்த செய்திகள் பரவின. உக்ரைன் ராணுவ டெலிகிராம் சேனல் ஒன்று ஏவுகணைகள் நகரை நோக்கி செலுத்தப்பட்டதாக தெரிவித்தது. இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா தலைமையில் போர் முடிவுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து 20 புள்ளிகள் கொண்ட அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார். இதில் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியமானதாக உள்ளது. ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications