ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என்பது ஒரு வருடத்தினை தாண்டியும் நீட்டித்து வரும் நிலையில், ரஷ்யா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. எப்படியேனும் சமாளித்து தொடர்ந்து முன்னேறி வரும் ரஷ்யாவின் வசம், 2024ல் பணம் இல்லாமல் போகலாம் என ரஷ்யாவின் பெரும் பணக்காரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஒலெக் டெரிபாஸ்கா என்ற அந்த பணக்காரர் உலகின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Rusal international PJSC என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
கஜானா காலியாகிவிடும்
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஒலெக் டெரிபாஸ்கா , ரஷ்யாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். இவர் தான் அடுத்த ஆண்டில் ரஷ்யாவின் கஜானா என்பது காலியாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
எப்போது வாய்ப்பு கிடைக்கும், ரஷ்யாவினை விரட்டி விரட்டி அடிக்கலாம் என நேரம் பார்த்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கு, ஒலெக்கின் இந்த அறிவிப்பானது ஒரு வாய்ப்பு இருக்கு என்பது போல பார்க்கப்படுகின்றது.
முதலீடு தேவை
ரஷ்யாவில் உக்ரைன் போர் மத்தியிலும். ரஷ்யா பொளாதார பிரச்சனையில் இருந்து மீண்டும் வர, மற்ற நாடுகளின் முதலீடு என்பது தேவை. ஆனால் தற்போதைய பிரச்சனையின் மத்தியில் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக ரஷ்யாவுக்கு மற்ற நாடுகளின் உதவி என்பது அவசியம் தேவை.
நிதி பற்றாகுறை
தொடர்ந்து ரஷ்யாவில் முதலீடுகள் குறைந்து கொண்டே உள்ளது. நிதி என்பதும் குறைந்து கொண்டுள்ளது. ஆக ஏற்கனவே இப்பிரச்சனையை ரஷ்யா உணரத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டே ரஷ்யாவில் பற்றாக்குறை தான் இருந்தது. 2023ல் இது இன்னும் மோசமாக உள்ளது. தற்போதுள்ள பெரும் நிறுவனங்களை அரசாங்கம் பயன்படுத்த நினைக்கிறது.
கூடுதல் வரி விதிப்பா?
ஏற்கனவே பெரும் நிறுவனங்கள் அழுத்தத்தில் உள்ளன. இந்த நிலையில் கூடுதல் விதிப்பதற்கான திட்டத்தினையும் அரசு எடுத்துள்ளது. ஆக இது மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
வருமானம் சரிவால் அரசு மூலதன செலவினங்களை குறைக்கலாம். மொத்தத்தில் ரஷ்யாவின் பொருளாதாரம் என்பது மிக மோசமான ஒன்றாக இருக்கப்போவது தெளிவாகியுள்ளது. இதனால் பொருளாதாரம், இதனால் வேலையின்மை விகிதம் என பலவும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications