ரஷ்யாவை அசைக்க முடியாதோ.. சவால்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனை..என்ன நடந்தது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவின் நடப்பு கணக்கு உபரியானது 2022ல் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

மத்திய வங்கியானது தொடர்ந்து இறக்குமதியில் சரிவு மற்றும் வலுவான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகள், ரஷ்யா பொருளாதாரத்தை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சிகள் இருந்தபோதிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க வழிவகுத்தது.

இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்! இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!

 நடப்பு கணக்கு உபரி விகிதம்

நடப்பு கணக்கு உபரி விகிதம்

இதன் காரணமாக ரஷ்யாவின் நடப்பு கணக்கு உபரி விகிதமானது பெரியளவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. முதலீடும் மற்றும் டிரான்ஸ்பர் என்பது கடந்த 2021ல் இருந்து 86% அதிகரித்து, 227.4 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதிகள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்திலும் இறக்குமதியானது வெகுவாக சரிவினைக் கண்டுள்ளது, இது நடப்பு கணக்கினை அதிகரிக்க முக்கிய பங்கு வகித்தது எனலாம்.

இறக்குமதி நிறுத்தம்

இறக்குமதி நிறுத்தம்

தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து வரும் நிலையில், மேற்கத்திய நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுக்கு தங்கள் சப்ளையை நிறுத்தி விட்டன. மேற்கத்திய நாடுகள் பல பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ள நிலையில், தேவையே இருந்தாலும் ரஷ்யா இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

ஆசிய நாடுகள் பலவும் ஆர்வம்
 

ஆசிய நாடுகள் பலவும் ஆர்வம்

எனினும் ஏற்றுமதி வருவாயினை ஈடுகட்ட ரஷ்யா இந்தியா, சீனாவுக்கு தங்களது ஏற்றுமதியினை அதிகரித்து, அதன் மூலம் தங்களது வருவாயினை ஈடுகட்டியுள்ளது. சீனா, இந்தியாவுக்கு வழங்குவதை போலவே தங்களுக்கும் தள்ளுபடி விலையில் எண்ணெய் சப்ளை செய்ய வேண்டும் என ஆசிய நாடுகள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

வரலாறு காணாத அளவுக்கு வணிகம்

வரலாறு காணாத அளவுக்கு வணிகம்

கடந்த ஆண்டில் ரஷ்யா சீனா இடையேயான வணிகம் 190 பில்லியன் டாலர்களை உச்சம் எட்டியதாக சீனாவின் தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

இறக்குமதிகள் வீழ்ச்சி கண்ட நிலையில் இருதரப்பு வார்த்தக இருப்பு என்பது, மொத்த ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு என்பது 2022ல் 282.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 170.1 பில்லியன் டாலராக இருந்தது.

கமாடிட்டி விலை அதிகரிப்பு

கமாடிட்டி விலை அதிகரிப்பு

மத்திய வங்கியானது அதிகளவிலான கமாடிட்டி விலைக்கு மத்தியில், இது கடந்த ஆண்டில் அதன் வர்த்தக உபரியை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் இறக்குமதியும் குறைந்துள்ளது மேற்கொண்டு நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

புதிய தடைகள் விதிக்கப்படலாம்

புதிய தடைகள் விதிக்கப்படலாம்

ரஷ்யாவின் இந்த வருவாய் அதிகரிப்பானது நடப்பு ஆண்டில் புதிய தடைகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.ஜப்பானின் தடையானது முழுமையாக அமலுக்கு வருவதால், இதுவும் நடப்பு ஆண்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஏழு முக்கிய பொருளாதாரங்களின் குழு பிப்ரவரி 5 முதல் ரஷ்ய எண்ணெய் தயாரிப்புகளை மேற்கொண்டு தடை பட்டியலில் சேர்க்க, கச்சா எண்ணெய்க்கு அப்பால் பிரச்சனையை மேற்கொண்டு பிரச்சனையை அதிகரிக்கலாம்.

உற்பத்தி குறையலாம்

உற்பத்தி குறையலாம்

நடப்பு ஆண்டில் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தியானது ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்கள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, ரஷ்யாவின் எண்ணெய் பொருட்களின் உற்பத்தி இந்த ஆண்டு, 272 மில்லியனில் இருந்து, 230 மில்லியன் டன்னாக கடுமையாக வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia posts record current account surplus of $227 billion in last year

Russia posts record current account surplus of $227 billion in last year
Story first published: Wednesday, January 18, 2023, 16:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X