11 ஆண்டுகளில் மோசமான சரிவு.. ரஷ்யாவில் பொருளாதார வளர்ச்சி 2020ல் 3.1% வீழ்ச்சி..!

ரஷ்யாவிலும் இந்தியாவினை போலவே கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது. அங்கு 38 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ரஷ்யாவிலும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும், முன்னதாக பலமான வீழ்ச்சியினை கண்டுள்ளது.

குறிப்பாக 2020ம் ஆண்டில் ரஷ்யாவின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 11 ஆண்டுகளில் மோசமான சரிவாகும்.

பொருளாதாரம் வீழ்ச்சி

பொருளாதாரம் வீழ்ச்சி

இதே நிபுணர்கள் இந்த சரிவினைக் 3.7% வீழ்ச்சி காணலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் அதனை விட சற்றே குறைந்து 3.1% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 2009 மற்றும் 1998ம் ஆண்டுகளில் முறையே 7.8% மற்றும் 5.3% பொருளாதாரம் வீழ்ச்சியினைக் கண்டது. கடந்த 2000 மற்றும் 2008க்கு இடையே பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 7% வளர்ச்சியடைந்தது.

முக்கிய வணிகம்

முக்கிய வணிகம்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, உலகளாவிய எரிசக்தி பொருட்களுக்கான தேவை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் ரஷ்யா மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
ரஷ்யாவின் முக்கிய வணிகம் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் என பல உள்ளன. கடந்த 2012ல் எண்ணெய் மற்றும் கேஸ் துறை, மொத்த ஜிடிபியில் 16% பங்கு வகித்துள்ளது. இதே மொத்த வருவாயில் 70% மேல் பங்கு வகிக்கிறது.

தேவை வீழ்ச்சி

தேவை வீழ்ச்சி

கொரோனா காரணமாக உலகளவில் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக பல தொழிற்துறைகள் முடங்கின. போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கின. மக்களும் வீடுகளுக்குள்ளே முடங்கிய காரணத்தால், எரிபொருட்களுக்கான தேவை முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மிக மோசமாக பின்னடைவை சந்தித்தன. அதன் எதிரொலி தான் ரஷ்யாவிலும் உள்ளது.

முக்கிய வணிகம் பாதிப்பு

முக்கிய வணிகம் பாதிப்பு

2020ம் ஆண்டின் தொடக்கத்தில் எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு வீழ்ச்சியினை கண்டது. இதன் காரணமாக ரஷ்யாவின் ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்பட்டது. இதனால் ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் பாதிகப்பட்டது. எனினும் இந்த வீழ்ச்சியானது நடப்பு ஆண்டில் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ரஷ்யாவில் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆக இது வளர்ச்சியினை மீட்டுக் கொண்டு வர வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+