ரஷ்யா செய்த வினை .. 2026 வரை ஐரோப்பா-வுக்கு செக்..!

ரஷ்யா - உக்ரைன் போர் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் எதிர்காலத்தைத் தலைகீழாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

இந்த நிலையில் இப்போருக்கு பின்பு ஐரோப்பாவின் எரிபொருள் விலை உயர்வின் மூலம் மட்டுமே சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவிலான பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இதை விட முக்கியமான விஷயம் கடந்த 10 வருடத்தில் பார்க்காத ஒரு பாதிப்புத் தற்போது ஐரோப்பாவில் துவங்கியதோடு இது அடுத்தச் சில வருடங்களுக்குத் தொடரும் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

பல தசாப்தங்களாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு-வை நம்பி மட்டுமே இயங்கி வந்தது.

உக்ரைன் - ரஷ்யா போர்

உக்ரைன் - ரஷ்யா போர்

தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பிய யூனியன் பிற மேற்கத்திய நாடுகள் உடன் சேர்ந்து ரஷ்யா மீது கடுமையாகத் தடைகளை விதித்த நிலையில் கடுப்பான ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தைக் குறைக்கத் துவங்கியது.

ஐரோப்பா

ஐரோப்பா

சமீபத்தில் ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பைப் மூலம் அனுப்பப்படும் எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளது.

எரிவாயு

எரிவாயு

இந்த நிலையில் ஐரோப்பா குளிர்காலம் முடிந்த உடன் தனது எரிவாயு இருப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் ரஷ்யாவின் உதவி மிகவும் குறைவாகவோ அல்லது மொத்தமாக இருக்காது.

ரஷ்யா-வும் சீனாவும் எண்ணெய் டேங்கர்களை அதிகளவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் டேங்கர் கப்பல்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது.

அமெரிக்கா முதல் கத்தார்

அமெரிக்கா முதல் கத்தார்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்கா முதல் கத்தார் வரையில் எரிவாயு உற்பத்தி அதிகரித்து ஐரோப்பாவிற்காகச் சப்ளை செயின் சீர்டைந்தால் மட்டுமே இந்தப் பிரச்சனை சரியாகும், இதனால் இந்தப் பிரச்சனை 2026 வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அப்படியென்றால் 2026 வரையில் அனைத்து எரிபொருள் விலையும் அதிகமாகவே இருக்கும் என்பது தான் முக்கியமான பிரச்சனை.

700 பில்லியன் டாலர் உதவி

700 பில்லியன் டாலர் உதவி

இந்த நிலையில் ஐரோப்பிய அரசு தற்போது அந்நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு எரிபொருள் விலை சுமையை அளிக்கக் கூடாது என்பதற்காகச் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவித் தொகையைத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்தப் பிரச்சனை 2026 வரையில் தொடரும் என்பதால் கட்டாயம் இது பலன் அளிக்கும் என Brussels திங்க் டேங்க் அமைப்பான Bruegel தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஆட்டம்

எரிபொருள் ஆட்டம்

ரஷ்யாவின் எரிபொருள் ஆட்டம் இப்போது தான் துவங்கியுள்ளது, ஆனால் அதற்குள்ளேயே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகளின் கடன்கள் அதன் மொத்த ஜிடிபி அளவு 60 சதவீதத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் எரிபொருள் விலை உயர்வால் மட்டுமே சுமார் 1 டிரில்லியன் டாலர் வரையிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என ப்ளூம்பெர்க் கணித்துள்ளது.

2026 வரை தொடரும்

2026 வரை தொடரும்

2026 வரையில் இந்தப் பிரச்சனை நீடிக்கும் என்பதால் இந்த 700 பில்லியன் டாலர் உதவி திட்டம் போதாது எனவும் இது ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+