உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் போரை ஆதரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவிலிருந்து ஒரு நிறுவனம், சீனாவில் இருந்து மூன்று நிறுவனம் என சுமார் 25க்கும் அதிகமான நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிமுறை திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதும், இந்தியா ரஷ்யாவுக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது. இது அனைத்தும் சர்வதேச வர்த்தக விதிமுறைக்கு உட்பட்டுச் செய்தாலும் தொடர்ந்து இந்தியாவை ஐரோப்பிய நாடுகள் விமர்சனம் செய்து வந்தது.

இதேவேளையில் ஐரோப்பாவில் பல நாடுகள் ரஷ்யாவில் இருந்து எரிவாயு, டீசல் உட்பட பல பொருட்களை வாங்கி வந்தது. இந்த உண்மையை வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பகிரங்கமாக முக்கிய கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
இதன் பின்பு ரஷ்யாவின் போருக்காக இந்தியா உதவுகிறது என்பது போல் ஐரோப்பிய நாடுகள் விமர்சனம் செய்யவில்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட உக்ரைன் ரஷ்யா போருக்கு துவங்கி 2வது வருடம் தொடும் வேளையில் ஐரோப்பிய ஒன்றியம் 25க்கும் அதிகமான நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்த பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இது தவிர, ஐரோப்பிய ஒன்றியம் 110 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை பரிந்துரைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது கொடுத்துள்ள பரிந்துரை பட்டியலில் மூன்று சீன நிறுவனங்களும், இந்தியா, இலங்கை, செர்பியா, கஜகஸ்தான், தாய்லாந்து, துருக்கி மற்றும் ஹாங்காங் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு நிறுவனமும் அடங்கும்.
ஐரோப்பிய யூனியனின் வர்த்தக தடைகளை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் பெரும்பாலானவை தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஈடுபட்டுள்ளவை. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதிகள் ரஷ்யாவின் டிபென்ஸ் மற்றும் செக்யூரிடிக்கு வலு சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்தது.
அந்த ஆவணம் குறித்து முழுமையான விபரம் தெரியாத நிலையில் தற்போது 20க்கும் அதிகமான நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே 620 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், முக்கியமாக ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வர்த்தக தடைக்கு 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இந்தியா மற்றும் சீன நிறுவனங்களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முதல் நிகழ்வாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications