உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்த நிலையில், இதில் முக்கியமான தடையாகப் பார்க்கப்படுவது உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பணப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தும் SWIFT சிஸ்டம்-ஐ பயன்படுத்த ரஷ்யாவுக்கும், ரஷ்ய நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது இந்தியாவுக்கும், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பல ரஷ்ய எண்ணெய் வயல்களில் முதலீடு செய்துள்ளது. இதில் பல எண்ணெய் வயல் முதலீடுகளில் பங்குகளை விற்றுவிட்டு வெளியேற முடியும், ஆனால் சில எண்ணெய் வயல் முதலீடுகளுக்கு ஈவுத்தொகை மட்டுமே கிடைக்கும்.
SWIFT பேமெண்ட் சேவை
தற்போது SWIFT பேமெண்ட் சேவையை ரஷ்யா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இந்த ஈவுத்தொகையை இந்திய நிறுவனங்களுக்கு, ரஷ்ய நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாது. உதாரணமாக ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் 49.9 சதவீத பங்குகளை Vankor எண்ணெய் தளத்தில் வைத்துள்ளது.
Vankor எண்ணெய் வயல்
Vankor என்பது ரஷ்யாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் தளத்தில் முக்கியமானது. இந்தத் தளத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி கொடுக்கப்படுவது இல்லை, இதற்கு மாறாக ஈவுத்தொகை தான் அளிக்கப்படுகிறது.
ஈவுத்தொகை
தற்போதைய நிலையில் பங்குகளைக் கூட எளிதாக விற்பனை செய்துவிட்டு வெளியேற முடியும், ஆனால் ஈவுத்தொகையை ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டு வர முடியாது, இதற்குக் காரணம் SWIFT தளத்தைப் பயன்படுத்த ரஷ்யா மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தான்.
ரூபிள் மதிப்பு
இதுமட்டும் அல்லாமல் ரஷ்யா மீதான வர்த்தகம், பொருளாதார, நிதியியல் தடைகள் மூலம் ரஷ்ய நாணயமான ரூபிள் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் எண்ணெய் வயல் முதலீட்டில் கிடைக்கும் ஈவுத்தொகை வருமானம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குக் குறைந்துள்ளது.
முதலீடு
இதேபோல் ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட்-ன் கனவு திட்டமான Vostok ப்ராஜெக்ட்-ல் இந்த Swift முறையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இந்திய நிறுவனத்தாலும், இந்திய அரசாலும், இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாமல் உள்ளது.
BP - ரோஸ்நெப்ட்
ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BP, ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ரோஸ்நெப்ட்-ல் 2013ஆம் ஆண்டு முதல் வைத்திருந்த 19.75 சதவீத பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்யாவுக்குச் சுமார் 25 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications